• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-27 17:13:01    
சீர்திருத்தம் செய்துள்ள சீன வெளியீட்டகத் துறை

cri

செய்தி வெளியீட்டக வாரியங்கள், தொழில் நிறுவனமாக மாறுவது, சீன வெளியீட்டகத் துறையின் சீர்திருத்தத்தின் முக்கிய அம்சமாக விளங்குகிறது. நவீன தொழில் நிறுவனத்தின் அமைப்புமுறையை உருவாக்குவதோடு, சந்தையின் முக்கிய பகுதியாக மாற வேண்டும். தொழில் நிறுவனங்கள் சுய நிர்ணய உரிமையைப் பெற்று, போட்டியாற்றலை அதிகரிக்கும். இதன் மூலம், செய்தி வெளியீட்டகத் துறையை வளப்படுத்தும் பொறுப்பேற்கப்படலாம் என்று சீன செய்தி வெளியீட்டக தலைமை அலுவலகத்தின் துணைத் தலைவர் ஜாங் சியாங் கோ தெரிவித்தார்.


வெளியீட்டகத் துறையின் சீர்திருத்தம், பல்கலைக்கழகத்தின் வெளியீட்டகங்களுக்கு உழையாற்றலைக் கொண்டு வரும். சீனாவின் பல்கலைக்கழக்கத்திலுள்ள வெளியீட்டகங்கள் அதிகமான சாதனைகளைப் பெற்றுள்ளன. சீர்திருத்தம் செய்வதன் மூலம், அவை சந்தையில் மேலும் ஆக்கப்பூர்வமாக வளர்ச்சி வாய்ப்பைத் தேடி வருகின்றன. இது மிகவும் முக்கியமானது என்று ரென்மின் பல்கலைக்கழகத்தின் வெளியீட்டகம், சீனாவில் புகழ் பெற்றது. இவ்வெளியீட்டகத்தின் தலைமைப் பதிப்பாசிரியர் சௌ வெவ் குவா செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது கருத்து தெரிவித்தார்.


அரசு சாரா வெளியீட்டக அலுவலகம், புதிய பண்பாட்டு உற்பத்தி ஆற்றல்களில் ஒன்றாகும். ஆனால், இதற்கு முன்பு, அரசு சாரா வெளியீட்டக அலுவலகங்கள் வெளிப்படையாகவும் சட்டப்படியாகவும் இயங்க முடியாது. வெளியீட்டகச் சீர்திருத்தத்தின் மூலம், வெளியீட்டக நடவடிக்கையில் கலந்துகொள்ளும் இத்தகைய வெளியீட்டகங்கள் வளர்ச்சி அரங்கைப் பெறலாம் என்று வெளியீட்டகத் துறையினர்கள் தெரிவித்தனர்.


நண்பர்களே, சீர்திருத்தம் செய்துள்ள சீன வெளியீட்டகத் துறை என்ற தகவலை அறிந்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு  இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.