• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-29 09:36:26    
உறுதியான மனநிலை கொண்ட உடல் சவால் மிக்க Wang Dong Dong ஆ

cri

Wang Dong Dongவின் புகழ் வெகுவாக பரவ தொடங்கியது. தமது மின்சாரக் கருவிகளை பழுது பார்க்குமாறு பலர் Wang Dong Dongக்கு வேண்டுகோள் விடுத்தனர். பின்னர், Wang Dong Dong அயரா முயற்சிகள் மேற்கொண்டு, ஒலி ஒளிக் கருவிகள், வண்ண தொலைக்காட்சி பெட்டி, DVD போன்ற மின்சார பொருட்களைப் பழுது பார்ப்பதிலும் முறையே தேர்ச்சி பெற்றார். அதனால் Wang Dong Dong மிகவும் புகழ் பெற்றுள்ளார்.

ஒருவர் சமூகத்தில் காலூன்றி நிற்க, ஒரு நுட்பத்தில் தேர்ச்சி பெறுவது முக்கியமானது. ஆனால் உன்னத ஒழுக்க நெறியைக் கொள்வது மேலும் முக்கியமானது என்று Wang Dong Dong கருதுகின்றார். சிறந்த தொழில் நுட்பம், நேர்மை ஆகியவற்றால் அவர் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

அவரது புகழ் பரவி வருவதுடன், பலர் அவரிடம் வந்து, மின்சாரப் பொருட்களை பழுது பார்க்கும் தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினர்.

கால் நோயால் பீடிக்கப்பட்ட Chen Jing Wang, அவரிடமிருந்து நுட்பத்தை கற்றுக்கொண்ட முதலாவது நபர் ஆவார். 1984ஆம் ஆண்டு 14 வயதான Chen Jing Wang, Wang Dong Dongவின் வீட்டுக்கு சென்று, தமக்கு மின்சார பொருட்களை பழுது பார்க்கும் தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொடுக்குமாறு அவரை வேண்டிக் கொண்டார். Wang Dong Dong அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். Wang Dong Dong கூறியதாவது:

"நாம் உடல் சவால் மிக்கவராக இருக்கின்றோம். பிறரின் உதவி, அவருக்கு தேவைப்படுகின்றது" என்றார், அவர்.

அப்போது முதல், Wang Dong Dong ஆசிரியராக மாறினார். பகலில் Chen Jing Wangக்கு தொழில் நுட்பத்தையும், இரவில் அது பற்றிய தத்துவ அறிவுகளையும் அவர் கற்றுக்கொடுத்தார். தமது பணி பயிலுனருக்கு மேலதிக அறிவுகளை கற்றுக்கொடுக்கும் பொருட்டு, இரவுதோறும், Chen Jing Wang வீடு திரும்பிய பின், Wang Dong Dong சில மணி நேரம் செலவிட்டு, சொந்தமாக கற்றுக் கொண்டார்.

தற்போது, Chen Jing Wang குவாங் துங் மாநிலத்தின் Shen Zhen நகரில் மின்னணு உற்பத்தி பொருள் கூட்டு நிறுவனம் ஒன்றை திறந்துள்ளார். தாம் Wang Dong Dongகிடமிருந்து கற்றுக்கொண்டுள்ள தலைசிறந்த தொழில் நுட்பம் மற்றும் உறுதியான மனநிலை பற்றி Chen Jing Wang கூறியதாவது:

(ஒலிப்பதிவு 7)

"ஆசிரியர் Wangக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவரின்றி, மின்னணு பொருட்களுடன் நான் தொடர்பு கொண்டிருக்க மாட்டேன். எனக்கு வேலையில் இன்னல்கள் ஏற்படும் போது, ஆசிரியர் Wangஐ நினைவுக்கூர்கின்றேன். என்றுமே கைவிடாதே என்ற அவரது எழுச்சி என்னை ஊக்குவிக்கின்றது. அவரை ஆசிரியராக பெற்றதில் பெருமை அடைகின்றேன்"என்றார் அவர்.

"Wang Dong Dongவின் பணி பயிலுனரின் பழுது பார்த்தல் தொழி்ல் நுட்பம் சிறந்தது" என்பதும், அவர் தமது பணி பயிலுனரிடம் பெரும் அக்கறை காட்டுவதும், உள்ளூர் பிரதேசத்தில் தெரிய வந்துள்ளன. பலர் தங்களுக்கு இந்த பழுதுபார்க்கும் தொழில் நுட்பத்தை கற்றுக்கொடுக்குமாறு அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த 24 ஆண்டுகளில், பணி பயிலுனர்கள் மின்சார கருவிகளைப் பழுது பார்க்கும் நுட்பங்களையும், பிறருடன் பழகும் வழிமுறைகளையும் Wang Dong Dong உணர்வுபூர்வமாக சொல்லிக்கொடுத்து வருகின்றார்.

Wang Dong Dongக்கு 247 பணி பயிலுனர்கள் இருக்கின்றனர். அவர்களில் தங்களது 40ஆம் வயதுகளில் உள்ளோரும், தங்கள் 20ஆம் வயதுகளில் உள்ளோரும் உள்ளனர். கற்றுச் சென்ற சில பணி பயிலுனர்கள் பழுதுபார்க்கும் கடைகளை திறந்து வைத்து, உரிமையாளராக மாறியுள்ளனர். சில பணி பயிலுனர்கள் தொழில் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். தற்போது, Wang Dong Dong இன்னும் பல பணி பயிலுனர்களிடம் அக்கறை காட்டி, அவர்களுக்கு பல்வேறு இன்னல்களைத் தீர்க்க உதவி செய்கின்றார். 26 வயதான

"ஆசிரியர் Wang பணி பயிலுனர்களுக்கு உணர்வுபூர்வமாகவும் பொறுப்புடனும் கற்றுக்கொடுத்து வருகிறார். எங்களுக்கு இன்னல்கள் ஏற்படும் போது, அவர் எங்களுக்கு உதவி செய்கின்றார். அவருக்கு மிகவும் நன்றி தெரிவிக்கின்றேன்" என்றார், அவர்.

தற்போது, Wang Dong Dongவின் பணி பயிலுனர்களில் பெரும்பாலோர் Gui Xi நகரில் வேலை செய்கின்றனர். சிலர் ஷாங்காய் மாநகரிலும், Fu Jian, Zhe Jiang ஆகிய மாநிலங்களிலும் வேலை செய்கின்றனர். இது பற்றி Wang Dong Dong மிகவும் மனநிறைவு அடைகின்றார். பணி பயிலுனர்களுக்கு கற்றுக்கொடுத்து, வேலைவாய்ப்பை உருவாக்கி, சமூகத்துக்கு மேலதிக பங்காற்ற விரும்புவதாகவும், பணி பயிலுனர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதே, தமக்கு அவர்கள் அளிக்கும் மிக பெரிய பிரதிபலன் என்றும் Wang Dong Dong கூறினார்.

நேயர்கள் இது வரை "உறுதியான மனநிலை கொண்ட உடல் சவால் மிக்க Wang Dong Dong பற்றி" கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சமூக வாழ்வு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.