• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-30 09:24:24    
திபெத்திலான பண்பாட்டு பாதுகாப்பு பற்றி

cri

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலும் யுன்னான், சிச்சுவான், கான்சூ, சிங்காய் ஆகிய மாநிலங்களில் திபெத்தின மக்கள் வாழ்கின்ற இடங்களிலும் திபெத்தின மக்கள் சீன மொழிக்கு பதிலாக திபெத் மொழியிலேயே பேசுகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு சீன மொழி பேசத் தெரியாது. இது திபெத் மொழி அழிக்கப்பட்டதாக கூறும் கூற்றுக்கு வலிமையான பதிலடி தரும் உண்மையாகும். சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் புகழ் பெற்ற அறிஞர் ஒருவருடன் இணைந்து லாசாவில் கல்வியியல் ஆய்வு மேற்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த அறிஞர் லாசாவுக்கு செல்லும் முன் திபெத்தின பண்பாட்டை பாதுகாப்பதற்கு சீனா மேற்கொண்ட முயற்சிகள் மீது சந்தேகம் கொண்டார். ஏனென்றால் அவருக்கு கிடைத்த தகவல்களின் படி திபெத் மொழிப் பயன்பாடு மற்றும் வெளியீட்டகம் தடுக்கப்பட்டது. ஆனால் லாசா வந்த பின் நான் அவரை உடனழைத்து தாச்சோ கோயில் போத்தலா மாளிகை ஆகியவற்றை பார்வையிட்ட போது அருமையாக பத்திரமாக பாதுகாக்கப்பட்டுள்ள திபெத் மொழி வரலாற்றுப் பதிவேடுகள் ஆவணங்கள் புத்தமதத் திருமறைகள் ஆகியவற்றை கண்டு நம்ப முடியாத வியப்பான உணர்வு அவருடைய முகக்தில் வெளிப்பட்டது. தவிரவும், லாசா நகரிலுள்ள புத்தகக் கடை மற்றும் பாலாங் சாலையிலுள்ள புத்தகக் கடையில் நுழைந்த பின் பல்வேறு இடங்களில் வெளியிடப்பட்ட திபெத் மொழி புத்தகங்கள், திபெத் மொழியிலான துவக்க மற்றும் இடைநிலைப் பள்ளி பாட நூல்கள் முதலியவை விற்கப்படுவதை கண்ட போது அறிஞர் மேலும் வியப்படைந்தார். வாழ்க்கையில் உண்மைகளை அறிய நேரடியாக சென்று தானே பார்க்க வேண்டும். மற்றவர் எப்படி சொன்னாலும் நம்ப கூடாது என்று அந்த அறிஞர் திபெத் பயணத்தின் மூலம் புரிந்து கொண்டார் என்று ஆய்வாளர் ஆன் ஸாய் தான் விளக்கிக் கூறினார். மேலை நாட்டு செய்தி ஊடகங்கள் பரப்பும் கூற்றை பற்றி கூறியதாவது

நீண்டகாலமாக திபெத் மொழியை ஆராய்ந்த நான் திபெத் மொழி போதியளவில் வளர்ச்சியடைந்த காலம் இப்போது தான் என்று கருதுகின்றேன். திபெத் மொழி புத்தமதத் திருமறையை பாதுகாக்க நடுவண் அரசு கோடிக்கணக்கான யுவானை ஒதுக்கியுள்ளது. புத்தமதத் திருமறையை சரிபடுத்தும் அதிகாரம் சீன திபெத்தியல் ஆய்வு மையத்துக்கு வழங்கப்பட்டது. திருமறையின் பக்கங்கள் அனைத்தும் சரிப்படுத்தப்பட்டு வெளியிடப்பட வேண்டும். இந்த பாதுகாப்புப் பணி 20 ஆண்டுகளாக நீடித்தது. பல நூறு அறிஞர்களும் பணியாளர்களும் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சீராக்கப்பட்ட இந்த புத்தமதத் திருமறை விரைவில் வெளியிடப்படும். 13வது தலாய்லாமா விரும்பிய ஆனால் நனவாக்காத புத்தமதத் திருமறை பாதுகாப்பு முயற்சியை நடுவண் அரசு அவருக்காக நிறைவேற்றியுள்ளது. மேலை நாட்டு அறிஞர்கள் சீனாவில் ஆய்வுப் பயணம் செய்த போது இந்த சீரமைப்புப் பணியை பார்த்துவிட்டு சீன நடுவண் அரசை உயர்வாக பாராட்டினர் என்று ஆய்வாளர் ஆன் ஸாய் தான் கூறினார்.