• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-27 10:33:13    
2009 துப்பாக்கிச்சுடுதல் உலகக் கோப்பை

cri
20ம் நாள் நடைபெற்ற 2009ம் ஆண்டு துப்பாக்கிச்சுடுதல் உலக கோப்பையின் பெய்ஜிங் ஆட்டத்தில், சீன வீரர் ஷீ சிங் லுங், 683 என்ற புள்ளிகள் பெற்று, 10 மீட்டர் ஆடவர் குழல் துப்பாக்கி சுடும் போட்டியின் சாம்பியன் பட்டத்தை பெற்றார். அவர் அணிதோழர் மை ச்சியா ச்சியே 2வது இடத்தை பிடித்தார்.
சீன தேசிய விளையாட்டு ஆணையத்தின் ஜிம்னாஸ்டிக் மையம், 20ம் நாள், 7 புதிய உலக சாம்பியன் பட்டம் பெற்றோருக்கு, சாம்பியன் பெயர் பட்டியலில் நுழைந்ததற்கான விழாவை நடத்தியது. ஹோ கோ சின், ஃபோங் ச்சே உள்ளிட்ட உலக சாம்பியன்களின் நிழற்படங்கள், லி நின் உள்ளிட்ட முன்னோரின் நிழற்படங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டன.

இந்த புதிய உலக சாம்பியனில், ஹோ கோசின், ச்சியாங் யுயுன், லி சேன்சேன், தன் லின்லின், யாங் யீலின், ஃபாங் ச்சை, சாங் குங்தாவ் ஆகியோர் அடங்குகின்றனர். யாங் வேய், லி சியாவ்போங், ஹுவாங் சு, சோ கை, ஷியாவ் ச்சின், சேன் யீபிங், சேன் ஃபே ஆகிய ஒலிம்பிக் சாம்பியன்களும் வரவேற்கப்பட்டனர்.
2009ம் ஆண்டு 5 தடகள கலப்பு போட்டியின் ஆடவர் பிரிவின் ஆட்டம் 20ம் நாள் முடிவடைந்தது. புகழ்பெற்ற செக் வீரர் போலிவ்கா, ஓட்டம் மற்றும் கை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் சீராக விளையாடி, சாம்பியன் பட்டம் பெற்றார். சீன வீரர்கள் வாங் குங், லி லின் முறையே, 13 மற்றும் 30வது இடத்தைப் பிடித்தனர்.

20ம் நாள் வெளியிடப்பட்ட உலக மகளிர் டென்னிஸ் தரவரிசையில், சீனாவின் வீராங்கனை சேன் ச்சியே தொடர்ந்து 16வது இடத்தை வகிக்கின்றார். லி நா. 30வது இடத்தில் இருக்கிறார். போங் சுயை 33வது இடத்தில் உள்ளார்.
ரஷியாவின் புகழ் பெற்ற வீரர் சபினா முதலிடத்தில் உள்ளார்.
2009ம் ஆண்டு 5 தடகள கலப்பு போட்டியின் ஆடவர் பிரிவின் ஆட்டம் 20ம் நாள் முடிவடைந்தது. புகழ்பெற்ற செக் வீரர் போலிவ்கா, ஓட்டம் மற்றும் கை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் சீராக விளையாடி, சாம்பியன் பட்டம் பெற்றார். சீன வீரர்கள் வாங் குங், லி லின் முறையே, 13 மற்றும் 30வது இடத்தைப் பிடித்தனர்.
NBA அமெரிக்க தேசிய கூடைப்பந்து சங்கத்தின் இவ்வாண்டு தொடர் போட்டிகளில்,

இவ்வாண்டின் NBA தொடர்ப்போட்டியின் மிகச் சிறந்த சாதனையை பெற்ற, தமது அணியின் வரலாற்றிலும் மிகச் சிறந்த சாதனையை உருவாக்கிய CLEVELAND CAVALIERS அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் பிரவுன், 2008 2009ம் ஆண்டுக்கான மிகச் சிறந்த தலைமை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
38 வயதான மைக் பிரவுன், தலைமையிலான CLEVELAND CAVALIERS அணி ஆடிய 82 ஆட்டங்களில், 66 வெற்றி 16 தோல்வி என்ற மிகச் சிறந்த சாதனையை பெற்றது. நடப்பு போட்டியில் இறுதிகட்ட சாம்பியன் பட்டத்தை CLEVELAND CAVALIERS அணி வெல்லக்கூடிய சாத்தியக்கூறு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.