• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-30 09:34:16    
பெய்ஜிங் தாவரத்தோட்டம்

cri
பெய்ஜிங் தாவரத்தோட்டம், சீனாவின் வடபகுதியில் மிகப் பெரிய வனத்தோட்டமாகும். வசந்தகாலத்தில், பயணிகள் இப்பூங்காவில் அழகான பல்வகை மலர்களைப் பார்த்து ரசித்து, பூங்காவிலுள்ள தேனீரகத்தில் தேனீரை அமைதியாக சுவைக்க முடியும்.

பெய்ஜிங் தாவரத் தோட்டம், 1956ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதில் 10 ஆயிரத்துக்கு மேலான மர தாவர வகைகள் உள்ளன. ஆண்டுதோறும் வசந்தகாலத்தில் இங்கு நடைபெறும் பீச் மலர் விழா பயணிகளை ஈர்த்து வருகிறது. மார்ச் 21ம் நாள் தொடங்கிய 21வது பெய்ஜிங் பீச் மலர் விழாவும் 6வது உலக புகழ்பெற்ற மலர்களின் கண்காட்சியும் மே திங்கள் 5ம் நாள் வரை நீடிக்கும். இவ்விரு கண்காட்சிகளில், சுமார் 200 வகை மலர்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன என்று இத்தோட்டத்தின் துணைத் தலைவர் சாவ் சிவேய் அறிமுகப்படுத்தினார்.

கடந்த சில ஆண்டுகளின் அனுபவங்களின் படி, பீச் மலர் விழா காலத்தில் சுமார் 15 இலட்சம் பயணிகள் மலர்களைக் கண்டு ரசிக்க வருதை தருகின்றனர். சீனாவில் பீச் மலர், அருமை என்றும் செழுமையின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. பீச் மலர்களைக் கண்டு ரசிக்கி, நல்ல தொரு வாய்ப்பைக் கிடைப்பதாக மக்கள் விரும்புகின்றனர். எமது தோட்டத்தில் ஏராளமான பீச் மலர்களைப் பயிரிட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.
அவற்றில் இளஞ்சிவப்பு நிறமான காட்டு பீச் மலர்கள், பயணிகள் பலரை ஈர்த்துள்ளன. திரு குசியேளசென் வாரயிறுதி காலத்தில் காதலியுடன் இணைந்து மலர்களைப் பார்த்து ரசித்து, நிழற்படங்களை எடுக்கிறார். அவர் கூறியதாவது:

ஒரு புறம், சாதாரண காலத்தில் வேலை செய்யும் நிர்பந்தம் அதிகம். இங்கு வந்து பீச் மலர்களைக் கண்டு ரசிப்பது, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியூட்டலாம். மறு புறம், எங்களுக்கு நிழற்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும். கேமரா மூலம் இந்த அழகான காட்சியைப் பதிவு செய்ய விரும்புகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.
பீச் மலர் விழாக்காலத்தில், உலகில் புகழ்பெற்ற பல்வகை மலர்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. ஏப்ரல் திங்களின் நடுப்பகுதியில், தூலிப் மலர் கடல், பயணியரின் கண்களுக்கு விருந்தாக அமையும். தற்போது பெய்ஜிங் தாவரத் தோட்டத்தில் அரிய புகழ்பெற்ற மலர்கள் பலவற்றைக் கண்டு ரசிக்கலாம் என்று சாவ் சிவேய் கூறினார்.

இந்தப் புகழ்பெற்ற மலர்கள் பசுங்கூடத்தில் அழகாக காட்சிக்கு வைக்கப்படுகின்றன. ஆசியாவில் மிகப் பெரிய பசுங்கூடம், இதுவாகும். இதில், 3100க்கு மேலான மலர் வகைகள் உள்ளன. சான்பியா, லாவோஸ், செயின்ட் மாரியானோ முதலிய நாடுகளின் தேசிய மலர்கள் இதில் இடம்பெறுகின்றன. பயணியர் பான் அம்மையார் எமது செய்தியாளரிடம் கூறியதாவது:

இன்று பெய்ஜிங் தாவரத் தோட்டத்திலுள்ள பசுங்கூடத்தில் அதிகமான அழகான மலர்களைக் கண்டேன். ஆடும் ஆர்க்கிட் மலர் எனக்கு மிகவும் பிடிக்கிறது. நடனமாடும் நங்கையைப் போல இம்மலர், மிகவும் அழகானது. இதர ஆர்க்கிட் மலர்கள், பல்வகை செடிக்கொடிகள், வெப்ப பிரதேசத்தின் மழைக்காடு ஆகிய காட்சிகளை மிகவும் விரும்புகின்றேன் என்று அவர் குறிப்பிட்டார்.