• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-28 17:23:14    
சாயெர்ஹூ காட்சிப் பிரதேசம்

cri

சீனாவின் லியாவ்நிங் மாநிலத்திலுள்ள ஃபூஷூன் நகரிலுல்ள சாயெர்ஹூ காட்சிப் பிரதேசம், 8 காட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. சாயெர்ஹூ என்பதற்கு, மென் இன மொழியில், செழுமையான மரங்கள் என்று பொருளாகும்.

இது, தாஹுவொஃபாங் நீர்த்தேக்கத்தை, முக்கியமாகக் கொண்ட காட்சிப் பிரதேசமாகும். அணைக்கட்டுக்கு முந்தைய பகுதி, தேகூ வளைகுடா, தாமரைத் தீவு, யுவான் ஷுவெய் லின் காடு, தியெய் பெய் ஷான் மலை உள்ளிட்ட 8 பகுதிகள் சாயெர்ஹூவில் இடம்பெறுகின்றன.

இங்கு, மலைகளும் ஏரிகளும் பச்சைப் பசேல் என இருக்கின்றன. தவிர, பழைய குகைகளும், அதிசயமான கற்களும் காணப்படலாம். இங்குள்ள காட்சிகள், மிங் மற்றும் சிங் வம்சக்காலங்களின் வரலாற்றுப் பண்பாடுடன் தொடர்புடையவை. இது, மக்களின் கண்களை ஈர்க்கும், அழகான மலைகள் மற்றும் ஏரிகளைக் கொண்ட, புகழ்பெற்ற சுற்றுலா இடமாகும்.

சாயெர்ஹூ காட்சிப் பிரதேசத்தின் மொத்த பரப்பளவு, 268 சதுர கிலோமீட்டராகும். இதில், ஏரியின் பரப்பளவு, 110 சதுர கிலோமீட்டராகும். இங்கு, லியாவ்நிங் மாநிலத்தின் மிக பெரிய செயற்கை ஏரி இருக்கிறது.