
தொலைவிலிருந்து பார்க்கும்போது மலை தொடர்கள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன. அருகிலிருந்து பார்க்கும் போது, காடுகளால் அடர்ந்ததாக காணப்படுகிறது. அது தான் நிங்ச்சி. தெளிந்த நீரும் பசுமையும் சூழ்ந்த மலைப்பகுதியான நீங்ச்சிக்கு திபெத் மொழியில், சூரியனின் இருக்கை என்று பொருளாகும். நிங்ச்சியின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 3000 மீட்டராகும். கடல் மட்டத்திலிருந்து மிகக் குறைவான உயரம் 152 மீட்டராகும். இப்பகுதி தான், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலேயே கடல் மட்டத்திலிருந்து மிகக் குறைவான உயரத்தில் அமைந்த நிங்ச்சியின் பகுதியாகும்.

நிங்ச்சியின் காட்டுப் பகுதி ஆதிகாலம், நன்றாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. நேராக ஓங்கி வளர்ந்த பழைய சைப்பிரஸ் மரங்கள், இமயமலை தேவதாரு மரங்கள், தாவர புதைப்படிவமான பன்னம் செடிகள், நூற்றுக்கணக்கான விதவிதமான அலிசா மலர்கள். உள்ளிட்ட ஏராளமான தாவரங்களால், இயற்கை அருங்காட்சியகம், இயற்கை மரபணுக்களின் களஞ்சியம் என்ற பெயரை நிங்ச்சி பெற்றுள்ளது.

|