வரலாற்றில் மிகப் பெரிய உலக பொருட்காட்சியான ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் சர்வதேச பங்கெடுப்புப் பணி, தடையின்றி நடைபெற்று வருகிறது. இது வரை, இதில் கலந்து கொள்ள உறுதிப்படுத்திய எந்த தரப்பும் தனது பங்கேற்பை தவிர்ப்பது பற்றிய கோரிக்கை ஏதும் இல்லை. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விவகார ஒருங்கிணைப்பு அலுவலகத்திலிருந்து கிடைத்த தகவல் இதை காட்டியது.
ஏப்ரல் 17ம் நாள் வரை, இப்பொருட்காட்சியில் கலந்து கொள்ளும் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் எண்ணிக்கை 234ஆகும். நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் எண்ணிக்கை திட்டமிட்ட நோக்கத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, 2010ம் ஆண்டின் மே முதல் நாள் தொடக்கம் அக்டோபர் 31ம் நாள் வரை நடைபெறும்.
|