சர்வதேச நிதி நெருக்கடியின் பின்னணியில்,இன்னலான பொருளாதார நிலைமையில் பல நாடுகள் சிக்கியுள்ளன. இருப்பினும், உலகப் பொருட்காட்சி என்ற வாய்ப்பை பயன்படுத்தி, நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அவை விரும்புகின்றன. தற்போது, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் சர்வதேச பங்கெடுப்புப் பணி தடையின்றி நடைபெற்று வருகிறது. ஷாங்காய் மாநகரின் துணைத் தலைவரும் உலகப் பொருட்காட்சியின் ஒருங்கிணைப்பு க்குழுவின் உறுப்பினருமான யாங் சியுங் அண்மையில் செய்தியாளருக்கு பேட்டி அளிக்கையில், இவ்வாறு தெரிவித்தார்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் போது, பிரிட்டன் பிற நாடுகளுடன் இணைந்து நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்கான தீர்வை காணும். அதன் மூலம், உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்ளும் மனவாக்குறுதியை நிறைவேற்றும் என்று, பிரிட்டன் பொருட்காட்சிப் பிரதேசத்தின் துணை தலைமை பிரதிநிதி கார்மா எலியட் அம்மையார் தெரிவித்தார்.
|