• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-29 11:29:24    
உலக மேசைப் பந்து சாம்பியன் போட்டி

cri
50வது உலக மேசைப் பந்து சாம்பியன்பட்டப் போட்டி 28ம் நாள் ஜப்பானின் Yokohama நகரில் அதிகாரப்பூர்வமாக துவங்கியது.
இந்த மேசைப் பந்து சாம்பியன்பட்டப் போட்டி மே 5ம் நாள் முடிவடையும். ஆடவர் ஒற்றையர் போட்டி, மகளிர் ஒற்றையர் போட்டி, இரட்டையர் போட்டி, ஆடவர் மகளிர் கலப்பு போட்டி ஆகிய 5 போட்டிகளில் சாம்பியன் பட்டங்கள் வழங்கப்படும்.
6வது வட கிழக்காசிய விளையாட்டுப் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழு 25ம் நாள் சீனாவின் வட பகுதியிலுள்ள தியன் சின் மாநகரில் நிறுவப்பட்டது. சீன தேசிய விளையாட்டு ஆணையத்தின் தலைவரும், சீன ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தலைவருமான Liu Peng இந்த விளையாட்டுப் போட்டியின்

ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக பொறுப்பு ஏற்றார். தியன் சின் மாநகராட்சித் தலைவர் Huang Xingguo இக்குழுவின் செயல் தலைவராக பொறுப்பு ஏற்றார்.
6வது வட கிழக்காசிய விளையாட்டுப் போட்டி 2013ம் ஆண்டு ஏப்ரல் 30ம் நாள் முதல், மே 10ம் நாள் வரை, சீனாவின் தியன் சின் மாநகரில் நடைபெறும். அமைதி, நட்பு, இணக்கம் மற்றும் வளர்ச்சி என்பது இந்த விளையாட்டுப் போட்டியின் தலைப்பாகும். உபசரிப்பு நகரமான தியன் சின் மாநகரம் வட கிழக்காசிய விளையாட்டுப் போட்டிக்கு சர்வதேச வரையறையை பொருந்தியதாக விளங்கும் 24 விளையாட்டு திடல்களையும் அரங்குகளையும் 10 பயிற்சி திடல்களையும் அரங்குகளையும் வழங்கும் என்று அறியப்படுகின்றது.

2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எமது மனங்களில் ஆழமாக பதிந்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்துவதன் திறமை குவாங் சோவுக்கு உண்டு என்பதை நம்புவதாக மலேசியா தேசிய ஒலிம்பிக் அமைப்பு குழுவின் துணைத் தலைவர் Cheng Weiyang அண்மையில் கோலாலம்பூரில் தெரிவித்தார்.
மலேசியா மற்றும் சீனாவின் பூப்பந்து அணிகள் மிகவும் நிறந்த நிலையில் உள்ளன. குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியா மேலும் சீரான சாதனைகளையும் மேலதிக பதக்கங்களையும் பெறலாம் என்று Cheng Weiyang நம்பிக்கை தெரிவித்தார்.
ஆசிய ஒலிம்பிக் செயல் குழுவும் குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழுவும் கூட்டாக நடத்திய ஆசியா பாதை என்ற பிரச்சார நடவடிக்கையின் பிரதிநிதிக் குழு கோலாலம்பூருக்கு சென்றடைந்த பின், மலேசிய செய்தி ஊடகங்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது. மலேசியாவிலுள்ள பல சீன மக்கள் குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டி பற்றிய செய்திகளில்

மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர் என்று மலேசியாவின் முக்கிய சீன மொழி செய்தியேடான சியான் சோ நாளேட்டின் செய்தியாளர் ஒருவர் வெளிப்படுத்தினார்.
குவாங் சோ நகர் மீது மலேசியாவின் சீன செய்தியேடின் செய்தியாளர்கள் பேரார்வம் காட்டுகின்றனர். ஆசிய விளையாட்டுப் போட்டியின் போது, குவாங் சோவுக்கு வர அவர்கள் விரும்புகின்றனர். அனைவரையும் கவர்ந்திழுக்க்க்கூடிய ஆற்றல் வாய்ந்த நகரம் குவாங் சோவாகும். இந்த நகரில் பயணம் மேற்கொள்ள பலர் விரும்புகின்றனர். ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெறுவதன் மூலம், மேலதிக சீன மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குவாங் சோ அதிகமாக ஈர்க்கலாம் என்று அவர் தெரிவித்தார்.