இதுவரை 7 கோடி பேர் ஷாங்காய் உலக பொருட்காட்சியில் ஆர்வம் செலுத்தியுள்ளனர். தொடர்புடைய வாரியங்கள் வெளிநாட்டுச் சந்தையில் தொடர்ந்து முக்கியமாக ஷாங்காய் உலக பொருட்காட்சியை பிரச்சாரம் செய்யும். இதில் நுழைவுச் சீட்டுக்கான விளம்பரம் முக்கிய அம்சமாகும். அதேவேளையில் விசா வழங்கும் கொள்கையில் விசா காலம் உரிய முறையில் நீட்டிக்கப்பட திட்டமிடப்படுகின்றது. ஷாங்காய் மாநகர கம்யூனிஸ்ட்க் கட்சிச் செயலாளரும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான யூ ச்சுன் சங் சில நாட்களுக்கு முன் செய்தியாளருக்கு பேட்டியளித்த போது இவ்வாறு தெரிவித்தார்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நடைபெறும் நாட்களில் சீனாவுக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு சாதாரண நாட்களில் வழங்கும் உதவிகளை விட மேலும் கூடுதலான உதவி நடவடிக்கைகள் வழங்கப்படும். பொருட்காட்சியை கண்டு ரசிக்கும் அதேவேளையில் சீனாவின் மற்ற இடங்களில் சுற்றுலா செய்யவும் அவர்களுக்கு உதவி வழங்கப்படும் என்று யூ ச்சுன் சங் விவரித்தார்.
|