உலகளவில் இரண்டாவது தொகுதி உணவகச் சேவை வினியோகத் தொழில் நிறுவனங்களை பொருட்காட்சியில் பங்கேற்க அழைக்கத்துவங்கியுள்ளதாக 2010ம் ஆண்டு ஷாங்காய் உலக பொருட்காட்சியின் ஒருங்கிணைப்புக்குழு 28ம் நாள் அறிவித்தது.
உலகின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள புகழ்பெற்ற பன்னாட்டு உணவு பொருட்கள் அரங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இந்நடவடிக்கையில் இடம்பெறுவதால், இதில், சீன மற்றும் வெளிநாட்டு உணவக தொழில் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த உணவு பொருட்கள் அரங்கின் பரப்பளவு சுமார் 40 ஆயிரம் சதுர மீட்டரை எட்டும் என்று அறியப்படுகின்றது.
|