• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-01 18:26:22    
ஷாங்காய் உலக பொருட்காட்சி

cri

2010ம் ஆண்டு ஷாங்காய் உலக பொருட்காட்சி துவங்குவதற்கு ஓராண்டு காலம் இருகின்ற நாள் 2009ம் ஆணடின் மே முதல் நாளாகும். 365 நாடுகளுக்கு முற்றைய நாளான இன்று சீனாவின் பெய்சிங்கில் கொண்டாட்ட நடவடிக்கை நடத்தப்பட்டது. அத்துடன், ஷாங்காயில், இப்பொருட்காட்சியின் காவலராக செயல்படும் தொண்டர்களின் பணி அதிகாரப்பூர்வமாக துவங்கியது. தற்போது, ஷாங்காய் உலக பொருட்காட்சியின் திடல்கள் மற்றும் அரங்குகளின் ஆக்கப்பணி, பொருட்காட்சிக்கான திட்டமிடல், செயல்பாட்டு ஆயத்தப் பணிகள் ஆகியவை விரைவாகவும் ஒழுங்காகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறன. அடுத்த ஓராண்டில், ஷாங்காய் உலக பொருட்காட்சிக்கான ஆயத்த பணிகளை செவ்வனே மேற்கொண்டு, உலகத்துக்கு வெற்றிகரமான மற்றும் திறமையான உலக பொருட்காட்சியை உருவாக்குவதாக அமைப்புக் குழு வாக்குறுதி அளித்தது.

ஷாங்காய் உலக பொருட்காட்சியின் துவக்கத்தின் நாட்களும் நேரமும் குறைந்து கொண்டே வருவதை காட்டும் கடிகாரம் திறக்கப்பட்ட நிகழ்ச்சி இன்று முற்பகல் பெய்சிங்கின் டியென் அன் மன் சதுக்கத்தில் நடைபெற்றது. கடந்த 7 ஆண்டுகளால உணர்வுபூர்வமான ஆயத்த பணிகள் மூலம், ஷாங்காய் உலக பொருட்காட்சி இறுதி கட்டத்தில் நுழைந்தது. வெற்றிகரமான மற்றும் திறமையான உலக பொருட்காட்சியை நடத்துவது என்பது சீன அரசு மற்றும் மக்கள் உலகத்துக்கு வழங்கிய வாக்குறுதியாகும் என்று சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் வூ பாங்கோ துவக்க விழாவில் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

இன்று, 2010ம் ஆண்டு ஷாங்காய் உலக பொருட்காட்சி நடைபெறுவதற்கு ஓராண்டு காலம் இருகின்ற துவக்கத்தை நாட்களும் நேரமும் குறைந்து கொண்டே வருவதை காட்டும் கடிகாரத்தை நாம் திறந்திருப்பது சீன அரசும் மக்களும் ஷாங்காய் உலக பொருட்காட்சிக்கு ஆதரவு அளித்து வருகின்ற மாபெரும் உற்சாகத்தை உலகிற்கு தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. நாம், இப்பொருட்காட்சியில் கலந்துகொள்ளும் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இப்பொருட்காட்சிக்கான பல்வேறு ஆயத்தப் பணிகளை செவ்வனே செய்து, ஷாங்காய் உலக பொருட்காட்சி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உத்தரவாதம் அளிப்போம் என்று அவர் உறுதி கூறினார்.

இன்று வரை, ஷாங்காய் உலக பொருட்காட்சியில் கலந்துகொள்ள 236 நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் முடிவு செய்துள்ளன. இதில், பதிவு செய்துள்ள 20 நாடுகள் சீனாவுடன் தூதாண்மை உறவை உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கை, திட்டமிட்டப்படி, சீனா வகுத்த இலக்கைத் தாண்டியது. வரலாற்றில் கண்டிராத அளவுக்கு மிக பெரிய உலக பொருட்காட்சியாக ஷாங்காய் உலக பொருட்காட்சி மாறும்.

மோசமாகி வரும் சர்வதேச நிதி நெருக்கடியில், ஷாங்காய் உலக பொருட்காட்சியின் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்புப் பணிகள் இக்கட்டான நிலையை எதிர்நோக்கும். பன்னாடுகள் பொருளாதார சிரமத்தை எதிர்நோக்கியுள்ள போதிலும், உலக பொருட்காட்சியை கொண்டு, நம்பிக்கையை உயர்த்தி, அனுபவத்தை பரிமாறிக் கொள்ள விரும்புகின்றன என்று ஷாங்காய் மாநகராட்சித் துணை தலைவரும், ஷாங்காய் உலக பொருட்காட்சி ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினருமான Yang Xiong எமது செய்தியாளருக்கு பேட்டி அளித்தபோது, தெரிவித்தார். அவர் கூறியதாவது:

இந்த உலக பொருட்காட்சியை சர்வதேச சமூகம் வெகுவாக ஏற்றுக்கொள்வதற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம். நிதி நெருக்கடியின் பாதிப்புகளைப் பெற்றுள போதிலும், இன்னலைச் சமாளித்து, இப்பொருட்காட்சியில் கலந்துகொள்வதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இந்த பொருட்காட்சி மூலம், பல்வேறு நாடுகளுடன் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, நிதி நெருக்கடியை கூட்டாக சமாளிக்கும் நம்பிக்கை உயரும் என்று இந்த நாடுகள் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இன்று, ஷாங்காயில், இப்பொருட்காட்சியின் காவலர்களாக செயல்படும் தொண்டர்களின் பணி அதிகாரப்பூர்வமாக துவங்கியது. 1500க்கு அதிகமான தொண்டர்கள் மற்றும் நகரவாசிகளின் பிரதிநிதிகள் துவக்க விழாவில் கலந்துகொண்டனர். திட்டப்படி, சுமார் 2 இலட்சம் தொண்டர்கள் உலக பொருட்காட்சி நடைபெறும் பகுதியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்குச் சேவைபுரிவார்கள். சுமார் 10 இலட்சம் நகரத் தொண்டர்கள் நகரம் முழுவதும் பொது மக்களுக்கு சேவைபுரிவார்கள்.

அடுத்த ஆண்டு, சீனாவிலும் உலக பொருட்காட்சியிலும் உலக நாடுகள் மீண்டும் கவனம் செலுத்தும். 2002ம் ஆண்டு, உலக பொருட்காட்சியை நடத்துகின்ற உரிமையைப் பெற்றபோது, சீனா வாக்குறுதி அளித்த சீனாவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருப்பது, உலகிற்கு ஒரு திறமையை வழங்கியுள்ளதாகும் என்று ஷாங்காய் மாநகராட்சிக் கட்சிக் குழுவின் செயலாளரும், ஷாங்காய் உலக பொருட்காட்சியின் செயல்க் குழுவின் தலைவருமான Yu Zhengsheng தெரிவித்தார்.