• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-04 17:35:24    
சீனாவின் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நடவடிக்கைகள்

cri

அண்மையில், உரிமை மீறல் தடுப்பு நடவடிக்கைகளில், சீன அரசு ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டு வருகிறது. அறிவுசார் சொத்துரிமை மீறல் நடவடிக்கையை தடுக்கும் உறுதி வெளிப்படையாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. தவிர, இவ்வாண்டின் சுமார் 5 கோடி உரிமை மீறல் மற்றும் சட்டவிரோத பொருட்கள், தொடர்புடைய நடவடிக்கைகளில் ஒழிக்கப்பட்டுள்ளன. தற்சார்பு புத்தாக்கப் பொருளாதாரத்தை உருவாக்கும் உறுதியை சீன அரசி தெரிவித்தது. அமெரிக்க திரைப்படச் சங்கத்தைச் சேர்ந்த சீனாவின் தலைமை பிரதிநிதி ஃபான் வெய் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது இவ்வாறு தெரிவித்தார்.


புதிய நூற்றாண்டில் நுழைந்த பின், புதிய ரக தேசிய நோக்குத் திட்டத்தை சீன அரசு வகுத்துள்ளது. 2008ம் ஆண்டு, சீனாவின் தேசிய அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புக்கான வளர்ச்சி நோக்குத் திட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு பணி மேம்படுத்தப்படும். உரிமை மீறல் நடவடிக்கையை தொடர்ந்து தடுப்பதோடு, அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புக் கண்ணேட்டத்தை அதிகரிக்க வேண்டும். அறிவுக்கு மதிப்பளித்து, புத்தாகத்தை பிரச்சாரம் செய்து, சட்டத்தைப் பின்பற்றும் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புச் சூழலை உருவாக்க வேண்டும்.


2004ம் ஆண்டுக்குப் பின், ஆண்டுதோறும், ஏப்ரல் திங்கள் 20ம் நாள் முதல் 26ம் நாள் வரை, அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புப் பணிக்கான பிரச்சார வார நடவடிக்கை நடைபெறும். இந்நடவடிக்கையைப் பயன்படுத்துவதன் மூலம், பல வடிவங்களிலான பிரச்சாரப் பணியை சீனத் தேசிய முன்னேற்றும். இவ்வாண்டு, பெரிய ரக கலை நிகழ்ச்சிக்களை சீனத் தேசிய அறிவுசார் சொத்துரிமை ஆணையம் முதல் முறையில் நடத்தியது.


நண்பர்களே, சீனாவின் அறிவுசார் சொத்துரிமைப் பணி என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.