குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொண்டர்களின் காவலர் பணி
cri
16வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் நகர தொண்டர்கள் அணி திரட்டல் கூட்டம் 21ம் நாளிரவு குவாங் சோ பல்கலைக்கழக நகரில் நடைபெற்றது. 16வது குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் நகர தொண்டர்களின் காவலர் பணி அதிகாரப்பூர்வமாக துவங்குவதை இது கோடிட்டுக்காட்டியது. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டி தொண்டர்களின் முக்கிய முழக்கமான அதிக உயர்வுக்கு தொடர்ந்து முன்னேறுவது மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டி தொண்டர்கள் சேவையின் தலைப்பான தொண்டர்கள் பொறுப்பு ஏற்பது, புதிய வாழ்க்கையை உருவாக்குவது ஆகியவை வெளியிடப்பட்டன.
 ஆசிய விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தும் வகையில், குவாங் சோ நகரவாசிகள் பல்வேறு ஆயத்த பணிகளில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுப்பதற்கு மகிழ்ச்சி அளிப்பதாக ஆசிய ஒலிம்பிக் செயல் குழுவின் தலைவரின் சார்பில் இதன் துணைத் தலைவர் Huo Zhenting கூறினார். ஆசியாவின் பல்வேறு நாடுகளையும் உலகின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த விளையாட்டு இரசிகர்கள், நட்பை பேணிமதிக்கும் நண்பர்கள், குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் சேர்ந்த தொண்டர் குழு ஆகியோர் குவாங் சோ நகருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கும் ஊக்கமளிப்பதைப் பார்க்க விரும்புகின்றது என்றும் அவர் தெரிவித்தார். நகரவாசிகள் அனைவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொண்டராக மாறி, நடைமுறை நடவடிக்கைகளின் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொண்டர் சேவையில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்க வேண்டும் என்று சீன பொறியியல் கழகத்தின் முனைவரும், குவாங் சோ தொண்டாரின் புகழ் தூதருமான Zhong Nanshan வேண்டுகோள் விடுத்தார். தங்களது மாபெரும் ஆற்றல் மூலம், குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு பங்காற்ற வேண்டும் என்று சீனாவின் தலை சிறந்த பத்து தொண்டர்கள் என்ற விருதை பெற்ற Zhao Guangjun கூறினார்.
 பல்வேறு துறைகளின் பிரமுகர்கள், குவாங் தூன், ஹாங்காங், மக்கௌ மற்றும் தைவான் பிரதேசங்களைச் சேர்ந்த தொண்டர் பிரதிநிதிகள், குவாங் சோ நகரின் பல்வேறு துறைகளின் 4000க்கு அதிகமான இளைஞர் பிரதிநிதிகள் ஆகியோர், பல்கலைக்கழக நகரிலுள்ள Zhong Shan பல்கலைக்கழகத்தின் உள் அரங்கத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இது வரை பெயர்களை பதிவு செய்யும் நிலைமையை பார்க்கும் போது, குவாங் சோ 16வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களின் எண்ணிக்கை வரலாற்றில் மிக உயர்வாக இருக்கும். குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழுவின் செய்தியாளர் கூட்டத்திலிருந்து கிடைத்த தகவல் இதை தெரிவித்தது.
 குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் 42 போட்டிகள் உள்ளன. கிரிக்கெட், விளையாட்டு நடனம், டிராகண்படகு போட்டி, சக்கர கறுக்கல், சதுரங்கம் ஆகிய போட்டிகள் ஆசிய விளையாட்டுப் போட்டியின் அதிகாரப்பூர்வமான போட்டியாக மாறுவது இதுவே முதல் முறையாகும். ஆசிய ஒலிம்பிக் செயல் குழுவின் பல்வேறு உறுப்பு நாடுகள் தங்கள் பெயரைப் பதிவுசெய்து, அனைத்து போட்டிகளிலும் பங்கெடுக்கலாம். பல்வேறு போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர் அணிகளின் எண்ணிக்கையை ஆசிய ஒலிம்பிக் செயல் குழு கட்டுப்படுத்துவதில்லை. ஆசிய விளையாட்டுப் போட்டியின் மிகசிறந்த தனிப்பண்பு இதுவாகும். ஆசிய கண்ட பெரிய குடும்பத்தின் இணக்கத்தையும் நட்பையும் இது முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது.
|
|