• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-07 11:55:37    
வளர்ச்சியில் அரசு

cri

மின்னணு கழிவுகள்

மோசமான மிண்ணணுப் பொருட்களை கையாளும் ஆற்றலை கொண்டிருப்பதாக 14 ஆப்பரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவை ஐரோப்பிய ஒன்றியம் தேர்ந்தெடுத்துள்ளது. மின்னணுப் பொருட்களின் கழிவுகளை கையாளும் வசதிகளை நைஜீரியாவில் உருவாக்குவதற்கு வசதியாக இரண்டு நைஜீரிய நிபுணர்கள் பிரிட்டனின் மின்னணுப் பொருட்களின் கழிவு மேலாண்மை வசதிகளை பார்வையிட உள்ளனர். நைஜீரியாவில் தேவையின்றி ஒதுக்கப்படும் மின்னணு கழிவுகள் நாள்தோறும் பெருகிவருகின்றன. உலகளவில் பெருகி வருகின்ற மின்னணு கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு ஏற்றமுறையில் கையாளும் வசதிகளோ, கட்டுமானங்களோ நைஜீரியா போன்ற வளரும் நாடுகளில் இல்லை. அரசு சாரா நிறுவனமான பாசல் செயல்பாட்டு வலைபின்னலின் மதிப்பீட்டின்படி ஒவ்வொரு திங்களும் 4 இலட்சம் பயன்படுத்தப்பட்ட கணினிகள் நைஜீரியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றில் 25 முதல் 75 விழுக்காடு பயனற்றவை என தெரியவந்துள்ளது.


1 2