• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-05 10:14:03    
ஒரு இனிப்பான உணவு வகை

cri
க்ளீட்டஸ் – இன்றைய நிகழ்ச்சியில் வாணி, க்ளீட்டஸ் இருவரும் தொடர்ந்து உங்களுக்கு சுவையான ஒரு உணவு வகையின் தயாரிப்பு பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.
வாணி – கடந்த முறை நாம் fa gao எனும் இனிப்பான உணவு வகை பற்றி நேயர்களுக்கு அறிமுகப்படுத்தினோம்.
க்ளீட்டஸ் – ஆமாம், வீட்டில் இதனைத் தயாரித்து ருசிப்பார்த்ததாக சில நேயர்கள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் தெரிவித்தனர்.
வாணி – இன்று இன்னொரு இனிப்பான உணவு வகை பற்றி கூறுகின்றோம்.
க்ளீட்டஸ் – நல்லது.
வாணி – தென் மற்றும் கிழக்காசியாவில் மக்கள் தேங்காயையும் தேங்காயால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளையும் சாப்பிட விரும்புகின்றனர்.
க்ளீட்டஸ் – தென் சீனாவில் இத்தகைய உணவு வகைகள் அதிகம் என்று கேற்விப்பட்டேன். அப்படியா?
வாணி – ஆமாம். தமிழகத்தில் இத்தகைய உணவுப் பொருட்கள் அதிகம் அல்லவா?
க்ளீட்டஸ் – ஆமாம், தேங்காயைப் பொதுவாக இனிப்பு தவிர இதர உணவுகளிலும் சேர்ப்பார்கள். சரி, இன்றைய உணவு தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை எடுத்து கூறுங்கள்.
வாணி – முதலில், ஜவ்வரிசி 20 கிராம். நீங்கள் சந்தையில் அதை வாங்கலாம்.

இனிப்பான மக்காச்சோளம் 10 கிராம்
தேங்காய்ச் சாறு 50 மில்லி லிட்டர்
சர்க்கரை 4 தேக்கரண்டி
உலர்ந்த தக்காளி மாவு 2 தேக்கரண்டி
தொன்னை அல்லது சிறு கிண்ணங்கள் 4
வாணி – முதலில், ஜவ்வரிசியைக் கழுவிக்கொள்ள வேண்டும். அடுப்பின் மீது ஒரு வாணலியை வைத்து, ஜவ்வரிசியை இதில் போடுங்கள். பிறகு, இதில் போதுமான தண்ணீரை ஊற்றி, வேக விடுங்கள்.
க்ளீட்டஸ் – எத்தனை நிமிடங்கள் தேவை.
வாணி – முதலில், வாணலியிலுள்ள ஜவ்வரிசி வெள்ளை நிறமாகும். படிப்படியாக அவை மினுமினுப்பான கட்டிகளாக மாறிவிடும். அப்போது, வாணலியை அடுப்பிலிருந்து எடுக்கலாம்.


க்ளீட்டஸ் –இந்த வாணலியிலுள்ள கூடுதலான தண்ணீரை அகற்றி, இனிப்பான மக்காசோளத்தின் பற்களையும், 10 கிராம் சர்க்கரையையும் இதில் கொட்டி, நன்றாக கலந்து கொண்டு, சுமார் 5 நிமிடங்கள் அப்படியே வையுங்கள்.
வாணி – அடுப்பின் மீது மற்றொரு வாணலியை வைத்து, மெல்லிய சூட்டில், தேங்காய்ச் சாறை சூடுபடுத்துங்கள். எஞ்சிய 10 கிராம் சர்க்கரையையும், உலர்ந்த தக்காளி மாவையும் கவனமாக இதில் கொட்டலாம். இந்தப் போக்கில், இடைவிடாமல் கரண்டியால் கலத்தி கொடுத்திருக்க வேண்டும். சர்க்கரையும் மாவும் நன்றாக கரைந்த பிறகு, வாணலியை அடுப்பிலிருந்து வெளியேற்றலாம்.
க்ளீட்டஸ் – சிறிய தேக்கரண்டி மூலம், தயாரிக்கப்பட்ட ஜவ்வரிசியை தொன்னைகளில் அல்லது சிறிய கிண்ணங்களில் போட வேண்டும். பாதி அளவில் போட்டால் போதும்.


வாணி – பிறகு, தேங்காய்ச் சாறை தனித்தனியாக தொன்னைகளில் ஊற்றலாம். இறுதியில் ஒவ்வொரு தொன்னைகளின் மீதும் 2 மக்காச்சோள பற்களை வைக்கலாம்.
க்ளீட்டஸ் – நல்ல சுவைக்காக, இவற்றைக் குளிர் சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, எடுத்து சாப்பிடலாம்.
வாணி – ஜவ்வரிசி எந்தப் பொருளால் தயாரிக்கப்பட்டது என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?
க்ளீட்டஸ்—குறிப்பிட்ட வகை பனை மரத்தின் அடிப் பகுதியிலிருந்து எடுத்து சுத்தீகரிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒரு உணவு வகை தான். அதன் முக்கிய கருப்பொருள் மாவாகும்.


வாணி – இது மிகவும் எளிதாக செறிமானமாக்கூடியது. ஆகையால், ஏதாவது நோய் ஏற்பட்டு குணமடைந்த போது இதனை சாப்பிடுவது நல்லது. தவிர, நுரையீரல் நோயாளிகள் இதனை சாப்பிட்டு நன்மை பெறலாம்.
க்ளீட்டஸ் – எப்படி நேயர்களே, ஜவ்வரிசியால் தயாரிக்கப்பட்ட இந்த இனிப்பை வீட்டில் தயாரித்து ருசிப்பார்ப்பீர்களா?.