• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-06 15:51:10    
உலக ஸ்னூக்கர் சாம்பியன்பட்ட போட்டி

cri
4ம் நாள், 34 வயதான புகழ் பெற்ற ஸ்காட்லாந்து வீரர் ஜான் ஹிகின்ஸ், பிரிட்டனில் நடைபெற்ற உலக ஸ்னூக்கர் சாம்பியன்பட்டப் போட்டியின் இறுதிப்போட்டியில் 18-9 என்ற ஆட்டக்கணக்கில், இங்கிலாந்து வீரர் ஷான் மர்ஃபியை தோற்கடித்து, 3வது முறையாக உலக சாம்பியன்பட்டத்தை பெற்றார். 1998 மற்றும் 2007ம் ஆண்டில், அவர் உலக சாம்பியன்பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

4ம் நாள் முடிவடைந்த 10வது அமெரிக்க நியுசிலாந்து சர்வதேச திரைப்பட விழாவில், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணி பற்றிய திரைப்படம் கனவு-2008, மிகச் சிறந்த செய்தி ஆவணத்திரைப்படத்திற்கான பரிசை பெற்றது. இச்சர்வதேச திரைப்பட விழாவில், சீன திரைப்படம் ஒன்று, பரிசை பெறுவது இதுவே முதன் முறையாகும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான 7 ஆண்டு கால ஆயத்தப்பணியை, கனவு-2008 விளக்கியது.

NBA சம்மேளனத்தின் இவ்வாண்டுக்கான இறுதிப்போட்டிக்கு முந்தைய மேற்கு பகுதியின் காலிறுதிப்போட்டியில் DENVER NUGGETS அணி, 109-95 என்ற புள்ளிகள்கணக்கில், DALLAS MAVERICKS அணியை தோற்கடித்தது. 7 ஆட்டங்களில் அதிக வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், 1-0 என்ற ஆட்டக்கணக்கில் NUGGETS அணி, முன்னிலையில் இருக்கின்றது.
அண்மையில், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் வரலாற்று மற்றும் புள்ளிவிபர சங்கம், புதிய உலக கால்பந்தாட்ட தாக்குதல் முன்னணி வீரர் தரவரிசையை வெளியிட்டது. சீன ஷாங்ஹாய் சேன் குவா கால்பந்து மன்றத்தின் வீரர் காவ் லின், இதில் 29வது இடத்தில் உள்ளார். கடந்த திங்களில் அவர் 11வது இடத்தில் இருந்தார்.

3ம் நாள் பிரேசிலைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், 2009 உலக கடற்கரை வாலிபால் தொடர் போட்டியின் ஷாங்ஹாய் போட்டியில் சிறந்து விளையாடி, ஆடவர் மற்றும் மகளிர் சாம்பியன்பட்டங்களை பெற்றனர்.
இப்போட்டி, மே திங்கள் முதல் நாள் ஷாங்ஹாய் மாநகரில் துவங்கியது. 28 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 182 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.