• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-08 09:30:44    
2009 மென் வாள் வீச்சு உலக கோப்பை

cri
2009ம் ஆண்டு சர்வதேச மென் வாள் வீச்சு சம்மேளனத்தின் ஆடவர் மற்றும் மகளிர் மென் வாள் வீச்சு உலக கோப்பையின் ஆடவர் குழு இறுதிப்போட்டி 3ம் நாள் சீனாவின் கிழக்குப்பகுதியிலுள்ள ஷாங்ஹாய் மாநகரில் நடைபெற்றது. சீன அணி, 35-45 என்ற புள்ளிகள்கணக்கில் இத்தாலி அணியிடம் தோல்வியடைந்தது.
2009ம் ஆண்டு யோகோஹாமா உலக மேசைபந்து சாம்பியன்பட்டப்போட்டியில் 3ம் நாள் முதல் தங்கப்பதக்கம் வெல்லப்பட்டது. கலப்பு இரட்டையர் போட்டியின் இறுதிப்போட்டியில், சீன இணை லி பிங், சாவ் சேன், 4-2 என்ற ஆட்டக்கணக்கில்,

சீனாவின் மற்றொரு இணையான சாங் சி கோ, மூ சி இணையை தோற்கடித்தது. கடந்த 10 ஆண்டுகளாக, கலப்பு இரட்டையர் போட்டியில், சீன அணி, தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றது.
சீன ஆடவர் இணை வாங் ஹாவ் மற்றும் சேன் சீ, மகளிர் இணை கோ யுய் மற்றும் லி சியாவ் சியா, 4ம் நாள் ஜப்பானிய யோகோஹாமா நகரில் நடைபெற்ற உலக மேசைப்பந்து சாம்பியன் பட்டப்போட்டியின் இரட்டையர் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை பெற்றனர். ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில், வாங் ஹாவ், சேன் சீ இணை 4-1 என்ற ஆட்டக்கணக்கில்,

சீனாவின் மற்றொரு இணையான மா லுங், சு சின்னை தோற்கடித்தது. மா லுங், சு சின், இணை 2வது இடத்தையும், இதர சீன இணை, ஹாவ் சுயை, சாங் சி கோ மற்றும் ஜப்பானிய இணை மிசுதனி ஜுன், கிஷிகாவா சையா, ஆகியோர் 3வது இடத்தை பெற்றனர். மகளிர் இரட்டையர் இறுதிப்போட்டியில், கோ யுய், லி சியாவ் சியா இணை, 4-1 என்ற ஆட்டக்கணக்கில், மற்றொரு சீன இணையான தின் நின், கோ யன் இணையை தோற்கடித்தது. தின் நின், கோ யன் இணை 2வது இடத்தையும் சீன ஹாங்காங் இணை சியாங் ஹுவாய் ஜுன், தியை யா நா, தென்கொரிய கிம் குங் ஏ, பார்க் மி யுங் ஆகியோர் 3வது இடத்தையும் பெற்றனர்.

ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், சீன வீரர்கள், வாங் ஹாவும், வாங் லி சின்னும் நுழைந்துள்ளனர். மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், சாங் யீ நின், காவ் யுய், இருவர் மோதுவர்.
4ம் நாள், 34 வயதான புகழ் பெற்ற ஸ்காட்லாந்து வீரர் ஜான் ஹிகின்ஸ், பிரிட்டனில் நடைபெற்ற உலக ஸ்னூக்கர் சாம்பியன்பட்டப் போட்டியின் இறுதிப்போட்டியில் 18-9 என்ற ஆட்டக்கணக்கில், இங்கிலாந்து வீரர் ஷான் மர்ஃபியை தோற்கடித்து, 3வது முறையாக உலக சாம்பியன்பட்டத்தை பெற்றார். 1998 மற்றும் 2007ம் ஆண்டில், அவர் உலக சாம்பியன்பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது