• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-07 11:30:05    
செளவ் சியேச்சின் நினைவு அகம்

cri
பெய்ஜிங் தாவரத் தோட்டத்தின் பசுங்கூடத்தில் அற்புதமான செடிக்கொடிகளைப் பார்த்து ரசிக்கலாம். உலகில் மிகப் பெரிய விதையான கடல் தேங்காய் என்னும் செடி, குறிப்பிடத்தக்கது. இது, காதல் பழம் என்பதாக, உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது. வழிகாட்டி வாங் மெங்மெங் அறிமுகப்படுத்தியதாவது:

கடல் தேங்காய், இந்து மாக்கடலிலுள்ள சீஷெல்ஸ் குடியரசின் தீவுகளில் வளர்க்கின்றது. ஒவ்வொரு ஆண்டிலும் முழு உலகில் மொத்தம் 1200 பழங்கள் விலைகின்றன. 20 முதல் 40 ஆண்டுகள் வரை இவை மலர்ந்து பழங்கலைத் தரும்.
நடப்பு பீச் மலர் விழாக் காலத்தில் பெய்ஜிங் தாவரத்தோட்டம், பல பண்பாட்டு நடவடிக்கைகளை நடத்தியது. செளவ் சியேச்சின் நினைவு அகம் நிறுவப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவு விழா, இதில் அடக்கம். செளவ் சியேச்சின், சீனாவில்

புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். அவர் இயற்றிய "கற்கதை"என்னும் புதினம், கடந்த 200 ஆண்டுகளுக்கு மேல், பரந்தளவில் புகழ்பெற்றதாகும். 1984ம் ஆண்டு, பெய்ஜிங் தாவரத் தோட்டத்தில் செளவ் சியேச்சின் நினைவகம் நிறுவப்பட்டது. அண்மையில் இந்த நினைவகத்தில் தேனீரகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டு, தேனீர் பண்பாட்டுக் கண்காட்சியும் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றன. பயணிகள் இங்கு அமைதியாக அமர்ந்து தேனீரைப் பருகி, கற்கதை என்னும் புதினத்தில் குறிப்பிடப்படும் தேனீர் பண்பாட்டை உணர்ந்துகொள்ளலாம். நினைவகத்தின் தலைவர் லீ மிங்சின் கூறியதாவது:
கற்கதை என்னும் புதினத்தில், தேனீர் பண்பாடு, பல முறைகள் குறிப்பிடப்படுகின்றது. இப்புதினத்தில், தேனீர் பண்பாடு மூலம்,

மக்களுக்கிடையிலான உறவும் மனிதரின் மனக் கருத்தும் எடுத்துக்காட்டப்பட்டன. செளவ் சியேச்சின், தேனீர் பற்றி நன்றாக தெரிந்து கொண்டிருந்தார். இதனால், இந்தத் தேனீரகம், செளவ் சியேச்சின் நினைவகத்தின் பண்பாட்டுச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, தேனீர் பண்பாட்டையும், கற்கதை என்னும் புதினத்தின் ஆய்வையும் இணைத்து, பயணிகளுக்கு சீரான சுற்றுச்சூழலையும் மகிழ்ச்சியான மன நிலைமையையும் வழங்குகிறது. இங்கு காத்திருந்து, அமைதியாக தேனீர் குடித்து ரசிப்பதை அனுபவிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

பயணிகளுக்கு வசதியை வழங்க, பெய்ஜிங் தாவரத் தோட்டம், இவலச செல்லிட பேசி வழிகாட்டுச் சேவையைத் திறந்து வைத்துள்ளது. இச்சேவை மூலம், பயணிகள், காட்சித் தலங்களின் விளக்கங்கள், வன மரங்கள் பற்றிய பொது அறிவுகள், வரைபட வழிகாட்டுதல் முதலிய சேவையைப் பயன்படுத்தலாம். சீன மொழி மற்றும் ஆங்கில மொழியில், வேறுபட்ட செல்லிட பேசிகளுக்கு, சில வகை சேவை முறைகள் வழங்கப்படுகின்றன.
அன்பு நேயர்களே, இன்றைய நிகழ்ச்சி மூலம், பெய்ஜிங் தாவரத் தோட்டத்தைப் புரிந்துகொண்டீர்களா? வாய்ப்பு இருந்தால், பெய்ஜிங்கிற்கு வந்து, மலர்களைப் பார்த்து ரசித்து, தேனீர் பருக உங்களை வரவேற்கின்றோம்.