
மனித குலம் இது வரை ஆழம் அறியார யார்லுங் ட்சாங்போ ஆற்றுப்பள்ளத்தாக்கு, நிங்ச்சிக்கு அருகில் இருக்கின்றது. அங்கு, உலகில், மிகப் பெரிய உயர்வுத்தாழ்வான நில அமைப்பும் செழிப்பான தாவரங்கள் மற்றும் காட்டு விலங்குகள் போன்ற இயற்கை மூலவளங்களும் உள்ளன. அதன் ஆதிகால இயற்கைக் காட்சி, தொடர்ந்து நன்றாக பாதுகாக்கப்படுகின்றது.

பாசும் கோ ஏரி, நிங்ச்சியிலுள்ள அற்புதமான இயற்கைக் காட்சியாகும். பாசும் கோ என்றால் திபெத் மொழியில் பச்சை நிற நீர் என்று பொருள்படுகிறது. அதன் பெயரை போல், பாசும் கோ ஏரி, மாசுபடின்றி தூய்மையாக பச்சை நிறத்தில் இருக்கின்றது. அங்கு, ஊற்றுகள், அருவிகள், ஓடும் நீரால் ஏற்பட்ட பள்ளங்கள் முதலிய பல்வேறு இயற்கைக் காட்சிகளையும் முழுவதும் வெளிப்படாமல் உள்ள பழைய மத சிதிலங்களையும் தொல்பொருட்களையும் காண முடிகிறது. பாசும் கோ ஏரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான சிறந்த பருவகாலம் இலையுதிர்காலமாகும். மிதவெப்ப வெயிலில் ஏரியிருந்து மலைக் குன்றுகளும் வரையான வளாகம் காடுகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இலையிதிர் காலத்தில், செழுமையும் அமைதியுமான சூழல் பாசும் கோ ஏரியை, படம் எடுக்கும் போது சொர்க்கமாக தோற்றமளிக்க செய்கிறது.

|