• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-08 09:30:44    
ச்சுவங் இனத்தின் விழாக்கள்

cri
liulang விழா

இது, ஜூன் திங்கள் விழா.

சுவாங் இனம், சீனாவின் சிறுபான்மைத் தேசிய இனங்களில் மிக அதிக மக்கள் தொகையைக் கொண்டதாகும். சுவாங் இன மக்கள், முக்கியமாக guangxi சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்திலும் yunnan மாநிலத்திலும் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகை, ஒரு கோடியே 70 இலட்சத்துக்கு மேலாகும்.

சுவாங் இன மொழி, சீன-திபெத் மொழிக் குடும்பத்தின் சுவாங்-தெய் கிளையைச் சேர்ந்தது. இது, தெற்கு மொழி மற்றும் வடக்கு என இருவகை வட்டார மொழிகளாகப் பிரிக்கப்படுகிறது.

Dengna விழா

சுவாங் இனத்தின் நாட்டுப்புற மக்கள் இலக்கியம், இசை, நடனம், வேலைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், சுவாங் இன மக்கள், சுவாங் இசை நாடகத்தை உருவாக்கினர். வெண்கல மேளம், பிரதிநிதித்துவம் வாய்ந்த சுவாங் இனத்தின் இசைக்கருவியாகும்.

சுவாங் இன மக்கள், முக்கியமாக வேளாண்மையில் ஈடுபடுகின்றனர். புகழ் பெற்ற sanqi என்ற சீன மூலிகையும் பெருஞ்சீரக எண்ணெய்யும் சுவாங் இனப் பிரதேசத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த உற்பத்திப் பொருட்களாகும். அங்கு விளையும் கரும்பு விளைச்சல், சீன நாட்டில் முதலிடம் பெறுகிறது.

சுவாங் இன மக்கள், ஆதிகால மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். மூதாதையர்களை வழிபாடு செய்கின்றனர். சிலர், கிறிஸ்தவர்கள். சிலரே சீன சந்திர நாள் காட்டியின்படி 3வது திங்கள் 3வது நாள் திருவிழா, மிகவும் புகழ் பெற்றது. விழா நாள், காலப்போக்கில் இப்பரம்பரையிலிருந்து திட்டமிட்டு நிகழ்த்தப்படும் பாட்டுப் போட்டியாக மாறியுள்ளது. இதனால் விழா சூழல் மேலும் விமரிசையாகவும் உற்சாகமாகவும் மாறியுள்ளது.

ஹூங் பாங் விழா

சுவாங் இனமக்களின் மிக பிரமாண்ட விழா, வசந்த விழாவாகும். முடிவுறும் ஆண்டின் கடைசி இரவில், சுவையான கறிகளில் மிக தனிச்சிறப்பு வாய்ந்தது, முழு சேவல் கறி தான். இக்கறியில்லாமல், வசந்த விழாவைக் கொண்டாடியது போல் இருக்காது. புத்தாண்டு கொண்டாட்டம், 14 நாட்களுக்குப் பிந்திய விளக்கு விழா வரை நீடிக்கிறது.

சுவாங் இன மக்கள், பல கடவுள்களையும் இயற்கையையும் வழிபாடு செய்கின்றனர். ஒவ்வொரு பொருளுக்கு உயிர் உண்டு என்று அவர்கள் கருதுகிறார்கள். குறிப்பாக, அதிகமாக நிலத்தை கடவுளாக வழிபாடு செய்கின்றனர். சுவாங் இனப் பிரதேசங்களில், ஒவ்வொரு ஊரின், அருகிலான மலையடியில் ஒரு நிலக் கடவுள் கோயில் நிறுவப்படுகிறது. விழாவின் போது பன்றியைக் கொன்று அப்பன்றியை வைத்து வழிபாடு செய்கின்றனர்.