• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-08 09:30:44    
திபெத் கல்வித் துறையின் வளர்ச்சி

cri

கடந்த நூற்றாண்டின் 50ம் ஆண்டுகளில், திபெத் அமைதி விடுதலை பெறும் முன்பு, அரசியலும் மதமும் ஒருங்கிணைந்த பண்ணை அடிமை அமைப்புமுறையின் ஆட்சியால், பின்னடைவான இருளான சமூகச் சூழலில் திபெத் நீண்டகாலமாக இருந்தது. அப்போது, துறவியர் மடங்களும் திபெத்தின் உள்ளூர் அரசும் உருவாக்கிய பள்ளிகள் மட்டுமே இருந்தன. அதே வேளையில், துறவியர் அதிகாரிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் குழந்தைகள் மட்டுமே இப்பள்ளிகளில் பயில முடியும். கல்வியில் சேர்வதற்குரிய குழைந்தைகளின் பள்ளிச் சேர்க்கை விகிதம் 2விழுக்காட்டுக்கு சீழாகவே இருந்தது. இளைஞர்களிடையே எழுத்தறிவற்றவரின் விகிதம் 95விழுக்காட்டை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

50 ஆண்டுகால வளர்ச்சிக்கு பின், பாலர் கல்வி, துவக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி, இடைநிலை சிறப்பு தொழில் நுட்பக் கல்வி, உயர் கல்வி, தொழில் முறை கல்வி, வயதுவந்தோர் கல்வி, தொலைக்காட்சிவழி கல்வி உள்ளிட்ட முழுமையான கல்வி அமைப்புமுறை திபெத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. உயர் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை 6 ஆகும். இடைநிலை தொழில் முறை கல்விப் பள்ளிகளின் எண்ணிக்கை 7 ஆகும். இடைநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 119 ஆகும். துவக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 885ஆகும். பல்வகைப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 5லட்சத்து40ஆயிரத்துக்கு மேலாகும்.

1 2