கடந்த ஆண்டு மே 12ம் நாள் சிச்சுவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிந்திய புனரமைப்புப் பணி பற்றி தெரிவிக்கும் விதமாக செய்தியாளர் கூட்டத்தை, சீன அரசவையின் செய்திப் பணியகம், 8ம் நாள் நடத்தியது. இப்புனரமைப்புப் பணியில், பெருமளவு சாதனைகள் காணப்பட்டுள்ளன என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணை இயக்குநர் மூஹோங் தெரிவித்தார்.
இது வரை, சிச்சுவாங், கான்சூ, ஷான்சி ஆகிய மாநிலங்களில் இருப்புப்பாதை, உயர் வேக நெடுஞ்சாலை, விமான நிலையம் முதலிய முக்கிய அடிப்படைப் போக்குவரத்து வசதிகள், பன்முகங்களிலும் சீராக்கப்பட்டு, மீண்டும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. கிராமப்புறங்களில் கட்டுமானம், சீற்ற இழப்பு தடுப்பு முதலிய திட்டப்பணிகள் பன்முகங்களிலும் துவங்கி நடைபெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.
|