• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-08 17:39:08    
மறுசீரமைப்புப் பணியிலான சாதனைகள்

cri
மே 8ம் நாள், சீன அரசவையின் செய்தி அலுவலகம் சிச்சுவானில் நிலநடுக்கம் நிகழ்ந்ததற்குப் பிந்தைய மறுசீரமைப்பு நிலைமை பற்றிய செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. தற்போது, பல்வேறு மறுசீரமைப்புப்பணிகளில் முக்கிய முன்னேற்றங்கள் காணப்படுகின்றன என்று, சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் மூ ஹோங் தெரிவித்தார்.

2008ம் ஆண்டு மே 12ம் நாள் சிச்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தினால், இப்பிரதேசத்தில் பெரும் உயிர் மற்றும் உடைமை இழப்புக்கள் ஏற்பட்டன. சமூகப் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த ஓராண்டு காலத்தில், பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்கள் அனைவரின் முயற்சி மற்றும் பல்வேறு சமூக வட்டாரங்களின் ஆதரவுடன் மறுசீரமைப்புப்பணிகள் மாபெரும் முன்னேற்றமடைந்துள்ளன. இதுவரை, சிச்சுவான், கான்சூ, ஷான்சி ஆகிய மாநிலங்களின் இருப்பப்பாதைப் போக்குவரத்து, உயர்வேக நெடுஞ்சாலை, விமான நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படை போக்குவரத்து வசதிகள் முழுமையாக சீராக்கப்பட்டு, இயல்பான பயன்பாட்டுக்கு வந்துள்ளன. பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் 98 விழுக்காட்டு தொழில்துறை நிறுவனங்கள் உற்பத்தியை மீட்டெடுத்துள்ளன. நகர அமைப்பு முறைமை கட்டுமானம், கிராமக் கட்டுமானம், சீற்றத் தடுப்பு, இயற்கைச் சுற்றுசூழல் சீரமைப்பு, விளை நில சீர்ப்படுத்தல் முதலிய வரைவுத் திட்டங்கள் முழுமையாக தொடங்கின.

சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் மூ ஹோங்

செய்தியாளர் கூட்டத்தில் மூ ஹோங் கூறியதாவது:

2009ம் ஆண்டின் ஏப்ரல் திங்கள் இறுதி வரை, சிச்சுவான், கான்சூ, ஷான்சி ஆகிய மாநிலங்களின் மறுசீரமைப்புப் பணியில், 36 ஆயிரம் கோடி யுவான் தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்த வரைவு ஒதுக்கீட்டில் இது, மூன்றில் ஒரு பகுதியாகும் என்று அவர் அறிமுகப்படுத்தினார்.

குடியிருப்புக் கட்டுமானம், மறுசீரமைப்பில் மிகவும் முக்கியமான முன்னுரிமை மிக்க பணியாகும். 2009ம் ஆண்டின் இறுதிக்குள், விவசாயிகள் அனைவரும் நிரந்தர உறைவிடங்களி்ல் வசிப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று சீன உறைவிட மற்றும் நகர-கிராம கட்டுமான அமைச்சகத்தின் திட்ட வரைவுப் பிரிவின் தலைவர் தாங் கேய் குறிப்பிட்டார்.

தவிர, பள்ளிகளை, மிகவும் பாதுகாப்பான உறுதிமிக்க கட்டிடங்களாக கட்டியமைக்க வேண்டும் என்று சீன அரசு தெளிவாக கோரியது. தற்போது, பள்ளிகளின் கட்டுமான முன்னேற்றப்போக்கு, விரைவாக இருக்கிறது என்று மூ ஹோங் தெரிவித்தார்.

இதுவரை, சுமார் 70 விழுக்காட்டு மாணவர்கள், நிரந்தர பள்ளிகளில் கல்வி கற்று வருகின்றனர். 2010ம் ஆண்டின் வசந்தகாலத்திற்குள் அனைத்து மாணவர்களும் நிரந்த பள்ளிகளில் கல்வி கற்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

மறுசீரமைப்புக்கான சிறப்பு நிதித்தொகை, பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்துவதை உத்தரவாதம் செய்யும் வகையில், பல்வேறு விதிகளையும் அமைப்பு முறைமைகளையும் வகுத்து நடைமுறைப்படுத்தியதோடு, சீனக் கண்காணிப்பு அமைச்சகமும் நிதி அமைச்சகமும் திட்டமிட்ட மற்றும் திடீர் சோதனைகளையும் செய்து வருகின்றன என்று சீன நிதி அமைச்சகத்தின் பொருளாதார கட்டுமான பிரிவின் தலைவர் வாங் பாவ் ஆன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

நிதித்தொகையை சட்டவிரோதமாக பயன்படுத்துவதைக் கண்டறியந்தவுடன் உடனடியாக கண்டிப்பான தண்டனை விதிக்கப்படும். இது, அடிப்படை கோட்பாடாகும் என்று அவர் தெரிவித்தார்.

சீன அரசின் இலக்குப்படி, பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான மறுசீரமைப்புப்பணி மேலும் விரைவுபடுத்தப்பட வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குள் மறுசீரமைப்புக் கடமைகளை நிறைவேற்றி, பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்கள் வெகுவிரைவில் அருமையான வாழ்க்கையை அனுபவிப்பதை உறுதி செய்ய பாடுபட வேண்டும்.