• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-11 18:42:43    
சீனாவின் அறிவுசார் சொத்துரிமைப் பணி

cri

ஏப்ரல் திங்கள் 26ம் நாள், உலக அறிவுசார் சொத்துரிமை நாளாகும். அண்மையில், உரிமை மீறல் மற்றும் திருட்டுப்பதிப்பு நடவடிக்கைகளை சீன அரசு பெரிய அளவில் மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில், பல்வகை நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து, அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புக் கண்ணோட்டத்தை சமூகத்தின் பல்வேறு துறைகளும் உயர்த்த வேண்டும். அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பது, சொத்துரிமையைப் படைக்கலாம் என்ற கண்ணோட்டத்தை, சீனாவின் பொது மக்கள் உருவாக்கியுள்ளனர். புதிய பொருளாதார இயக்கத்துக்கு, சிறந்த வளர்ச்சிச் சூழலை மேம்படுத்துவது, மிக முக்கியமானது என்று பொதுவாக கருதப்படுகிறது.

 
அண்மையில், உரிமை மீறல் மற்றும் சட்டவிரோதமான வெளியீட்டகப் பொருட்களை தடுக்கும் நடவடிக்கைகள், சீனாவின் 31 மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஆக்கப்பூர்வமாக நடைபெற்றன. இதில் சுமார் 4 ஆயிரத்து 685 பொருட்கள் ஒழிக்கப்பட்டன. அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்புப் பணிக்கான பிரச்சார வார நடவடிக்கை துவங்க, சீன செய்தி வெளியீட்டக தலைமை அலுவலகத்தின் தலைவர் லியொ பின் செ பெய்ஜிங்கில் அறிவித்தார்.

 
2009ம் ஆண்டு, சீனாவின் தேசியளவில், உரிமை மீறல் மற்றும் சட்டவிரோத வெளியீட்டப் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் என்பது இந்த பிரச்சார வார நடவடிக்கையின் தலைப்பாகும் என்று அவர் தெரிவித்தார்.

 
இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம், உரிமை மீறல் நடவடிக்கையை தடுப்பதில், சீன அரசின் உறுதி எடுத்துக்காட்டப்பட்டுள்ளது என்று சீன செய்தி வெளியீட்டக தலைமை அலுவலகத்தின் துணைத் தலைவர் ஜியாங் சியெங் கோ பெய்ஜிங்கில் கூறினார்.
நண்பர்களே, சீனாவின் அறிவுசார் சொத்துரிமைப் பணி என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.