• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-11 17:18:24    
சிச்சுவானில் நெடுஞ்சாலை மறுசீரமைப்பு

cri

சிச்சுவான் வென்ச்சுவான் கடும் நிலநடுக்கத்தின் ஓராண்டு நினைவுக்கு முன்பாக, சீன வானொலி நிலையத்தின் செய்தியாளர்கள் வென்ச்சுவான் நிலநடுக்கத்தின் மையத்தில் அமைந்த yingxiu மாவட்டத்திற்கு சென்றிருந்தனர். அது, சிச்சுவான் மாநிலத்தின் தலைநகரான சங் து நகரத்திலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் அமைகிறது. Dujiangyan நகரம், இந்த 2 இடங்களுக்கிடை வழியில் அமைகிறது. எங்கள் செய்தியாளர் Dujiangyan நகரத்திலிருந்து yingxiu மாவட்டத்திற்கு சென்ற போது, கடுமையான போக்குவரத்து நெரிசலால் 45 கிலோமீட்டர் நீளமான பாதையில் 5 மணி நேரம் செலவிட வேண்டியிருந்தது.

இரவில் திரும்பிய போது, அவர்கள் புதிதாக கட்டியமைக்கப்பட்ட உயர்வேக நெடுஞ்சாலையில் 15தே நிமிடத்தில் Dujiangyan சென்றடைந்தனர்.

இந்த புதிய உயர்வேக நெடுஞ்சாலை, மே 12ம் நாள், அதாவது வென்ச்சுவன் நிலநடுக்கம் நிகழ்ந்த ஓராண்டு நினைவு நாளில் அதிகாரப்பூர்வமாகப் பயன்பாட்டுக்கு வரும். 5 மணி நேரம் மற்றும் 15 நிமிட நேரம் என்ற இரு வித பயண அனுபவத்திற்குப் பின், சீன வானொலி நிலையத்தில் பணியாற்றும் இத்தாலி நாட்டை சேர்ந்த Gabriella அம்மையார் மகிழ்ச்சியுடன் கூறியதாவது,

5 மணி நேரம், 15 நிமிடம், இரண்டுக்குமிடையில் வேறுபாடு மிக பெரியது. புதிய உயர்வேக நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு திறக்கப்பட்ட பின், yingxiu மாவட்டத்திற்கு மறுசீரமைப்புக்கான பொருட்களை அனுப்புவதற்கு மிக வசதியாக இருக்கும். புதிய நெடுஞ்சாலை, இங்குள்ள மறுசீரமைப்புப் பணிக்கு பெரிய நன்மை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

1 2 3 4