• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-11 10:17:29    
NBA இவ்வாண்டுக்கான தலைசிறந்த வீரர்

cri
NBA எனும் அமெரிக்க தேசிய கூடைப்பந்து சம்மேளனத்தின், CLEVELAND CAVALIERS அணியின் வீரர் LEBRON JAMES, இவ்வாண்டுக்கான போட்டித்தொடரில் தலைசிறந்த வீரர் என்ற விருதை பெற்றார். NBAவில் விளையாடத்தொடங்கிய 6 ஆண்டுகளில் LEBRON JAMES சம்மேளனத்தின் தலைசிறந்த வீரர் விருதை, முதன் முறையாக பெற்றுள்ளார். CLEVELAND CAVALIERS அணியின் வரலாற்றில், இவ்விருதை பெற்ற முதல் வீரர், LEBRON JAMES தான்.

NBA சம்மேளனத்தின் இவ்வாண்டுக்கான இறுதிப்போட்டிக்கு முந்தைய மேற்கு பகுதியின் காலிறுதிப்போட்டியில் DENVER NUGGETS அணி, 109-95 என்ற புள்ளிகள்கணக்கில், DALLAS MAVERICKS அணியை தோற்கடித்தது. 7 ஆட்டங்களில் அதிக வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், 1-0 என்ற ஆட்டக்கணக்கில் NUGGETS அணி, முன்னிலையில் இருக்கின்றது.
அண்மையில், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் வரலாற்று மற்றும் புள்ளிவிபர சங்கம், புதிய உலக கால்பந்தாட்ட தாக்குதல் முன்னணி வீரர் தரவரிசையை வெளியிட்டது. சீன ஷாங்ஹாய் சேன் குவா கால்பந்து மன்றத்தின் வீரர் காவ் லின், இதில் 29வது இடத்தில் உள்ளார். கடந்த திங்களில் அவர் 11வது இடத்தில் இருந்தார்.

புதிய உலக மகளிர் டென்னிஸ் தரவரிசை 4ம் நாள் வெளியிடப்பட்டது. சீன வீராங்கனை சேன் சியை, தொடர்ந்து 17வது இடத்தை வகிக்கின்றார். லி நா, 1 இடத்துக்கு முன்னேற்றி, 29வது இடத்திலுள்ளார். பாங் சுயை தொடர்ந்து 33வது இடத்தை வகிக்கின்றார்.
புகழ் பெற்ற ரஷிய வீராங்கனை சஃபினா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
3ம் நாள் பிரேசிலைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், 2009 உலக கடற்கரை வாலிபால் தொடர் போட்டியின் ஷாங்ஹாய் போட்டியில் சிறந்து விளையாடி, ஆடவர் மற்றும் மகளிர் சாம்பியன்பட்டங்களை பெற்றனர்.

இப்போட்டி, மே திங்கள் முதல் நாள் ஷாங்ஹாய் மாநகரில் துவங்கியது. 28 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 182 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.
சீனாவின் பல்வேறு நிலை கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பெயர் பட்டியலை சீன கால்பந்து சம்மேளனம் 4ம் நாள் வெளியிட்டது. சீன தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக காவ் ஹுங் போ பொறுப்பேற்பார். சீன ஒலிம்பிக் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக லியு சுன் மிங் மாறுவார். சு மாவ் சேன், சாங் நின், சீன இளைஞர் மற்றும் சீன சிறுவர் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர்களாக பொறுப்பேற்பர்.