• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-12 11:32:15    
பூஷூன் போர்க் கைதிகள் சிறை

cri

பூஷூன் போர்க் கைதிகள் சிறை, லியாவ்நிங் மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள பூஷூன் நகரின் ஹூன்ஹெ ஆற்றின் வடக்குக் கரையில் உள்ளது. அதன் பரப்பளவு, சுமார் 20 ஆயிரம் சதுர மீட்டராகும். அது, 1936ம் ஆண்டு கட்டியமைக்கப்பட்டது. சீனாவை ஜப்பான் ஆக்கிரமிக்க முயன்ற போது, சீனாவில் ஜப்பானை எதிர்க்கும் வீரர்களை மற்றும் நாட்டுப்பற்றுள்ள உடன்பிறப்புகளை அடக்குவதற்காக, ஜப்பானிய ராணுவத்தினர் கட்டியமைத்த ஒரு சிறையாகும். அப்போது, பூஷூன் சிறை என இது அழைக்கப்பட்டது.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள், ஜப்பான் போரில் தோல்வியடைந்த பின், அது, கோ மின் தாங் கட்சியால் கைப்பற்றப்பட்டது. பிறகு அதற்கு, லியாவ்நிங் 4வது சிறை என பெயர் மாற்றப்பட்டது.

1948ம் ஆண்டு நவம்பர் 21ம் நாள், பூஷூன் நகர் விடுதலை செய்யப்பட்ட பின், வடகிழக்கு மக்கள் அரசு, இங்கு லியாவ்நிங் 3வது சிறையைக் கட்டியமைத்தது.

1950ம் ஆண்டு ஜூன் திங்கள், அரசுத் தலைவர் மாவ்சேதுங் மற்றும் தலைமையமைச்சர் சோயேன்லாயின் கட்டளையின்படி, அது, பூஷூன் போர்க் கைதிகள் சிறை என அழைக்கப்படத் துவங்கியது.

அதைச் செப்பனிடுவதற்காக, 1999ம் ஆண்டு, பூஷூன் நகர் அரசு, 80 இலட்சம் யுவானை ஒதுக்கீடு செய்தது. தற்போது, அது, அமைதி மற்றும் நாட்டுப்பற்றுக் கல்வியை மேற்கொள்ளும் தளமாகவுள்ளது.