நிலநடுக்கத்தின் ஓராண்டு நினைவு
cri
சிச்சுவான் வென்ச்சுவான் நிலநடுக்கத்தின் ஓராண்டு நினைவு நடவடிக்கை, மே 12ம் நாள் பிற்பகல், இந்நிலநடுக்கத்தின் மையத்தில் அமைந்த yingxiu மாவட்டத்தில் நடைபெற்றது. அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் உள்ளிட்ட சீன முக்கிய தலைவர்களும், பல்வேறு துறையின் பிரதிநிதிகளும் இந்நடவடிக்கையில் கலந்து கொண்டனர். பிற்பகல் 2:28 மணிக்கு, நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்காகவும் பேரிடர் நீக்கப் பணியில் பலியான வீரர்களுக்காகவும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் முக்கிய உரை நிகழ்த்தினார். பிறகு அவர் வெண்சாமந்தி மலர் ஒன்றை, வென்ச்சுவான் நிலநடுக்க நினைவு சுவருக்கு முன் வைத்தார். லீ கெ ச்சியங் உள்ளிட்ட சீனாவின் பல தலைவர்களும் மலர் அஞ்சலி செலுத்தினர். 2008ம் ஆண்டின் மே 12ம் நாள், சீன சிச்சுவான் மாநிலத்தின் வென்ச்சுவானில் ரிக்டர் அளவு கோலில் 8ஆக பதிவான கடும் நிலநடுக்கம் நிகழ்ந்தது. கடந்த ஓராண்டில், மறுசீரமைப்புப் பணி விரைவாக முன்னேறி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மற்றும் உற்பத்திப் பணி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
|
|