சிச்சுவான் வென்ச்சுவான் நிலநடுக்கத்தின் ஓராண்டு நினைவு நடவடிக்கை மே 12ம் நாள் பிற்பகல் நிலநடுக்ககம் நிகழ்ந்த மையமான இன் சியூ வட்டத்தில் நடைபெற்றது. அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் உள்ளிட்ட சீன கட்சி மற்றும் அரசாங்கத் தலைவர்களும், பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளும் நினைவு நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.சொந்த ஊரை நினைக்கும் இசையுடன் மரியாதை செலுத்தும் 20 படைவீரர்கள் 10 மலர் கூடைகளை கடந்த ஆணஅடு நிலநடுக்கம் ஏற்பட்ட நேரமான 14:28 மணியை காட்டுகின்ற வடிவத்தின் மேல் வைத்தனர்.
அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் படியில் ஏறி மலர் கூடைகளின் முன்னால் மௌனமாக நின்று ்ஞ்சல் செலுத்தினார். பிற்பகல் 2:28 மணிக்கு நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்காகவும் பேரிடர் நீக்கப் பணியில் பலியான வீரர்களுக்காகவும் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் முக்கிய உரை நிகழ்த்தினார். சீற்றத்துக்கு பின் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பில் சீன மக்கள் அனைவரும் கூட்டாக இணைந்து வெளிநாடுகளில் வாழ்கின்ற சக நாட்டவர்களுடன் போராடி சீன தேசத்தின் ஒற்றுமையையும் இன்னல்களை கூட்டாக சமாளிப்பதென்ற மாபெரும் ஆற்றலையும் எடுத்துக்காட்டியுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் மனித குலத்தை பாதுகாத்து இயற்கை சீற்றங்களை எதிர்த்து நிற்பதற்கு ஆக்கப்பூர்வமாக பங்கு ஆற்றும் சீனாவின் மனவுறுதியை அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் தெரிவித்தார்.
பிறகு அவர் வெண்சாமந்தி மலர் ஒன்றை வென்ச்சுவான் நிலநடுக்க நினைவுச் சுவரின் முன்னால் வைத்தார். லீ கெ ச்சியங் உள்ளிட்ட சீன கட்சி மற்றும் அரசாங்க தலைவர்களும் மலர்களை சுவரின் முன்னால் வைத்து அஞ்சலி செலுத்தினர்.2008ம் ஆண்டின் மே 12ம் நாள், சீன சிச்சுவான் மாநிலத்தின் வென்ச்சுவானில் ரிக்டர் அளவு கோலில் 8ஆக பதிவான கடும் நிலநடுக்கம் நிகழ்ந்தது. கடந்த ஓராண்டில், மறுசீரமைப்புப் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மற்றும் உற்பத்திப் பணிகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
|