
நிங்ச்சியில், பீடபூமிக் கோதுமையைப் பயன்படுத்தி தயாரித்த மது, சாங்பா, எண்ணெய் தேனீர் முதலிய பாரம்பரிய திபெத் உணவு வகைகளைத் தவிர, லோபா இனத்தின் மஞ்சள் மது, மகாச்சோளம், மூங்கில் சோறு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

நிங்ச்சியில் எழில் மிக்க இயற்கை மூலவளங்களை கொண்டது. இதில், காட்டு வாழைப்பழம், அன்னாசி, எலுமிச்சம், ஆரின்சி உள்ளிட்ட ஏராளமான பழ வகைகள் இடம்பெறுகின்றன. மன்பா இனத்தின் மரக் கிண்ணம், மூங்கிலைப் பயன்படுத்தி பின்னிய பொருட்கள், லோபா இனத்தின் கற் அடுவி, பீங்காங் பொருட்கள் முதலிய தனிச்சிறப்பான கைவினை கலைப்பொருட்கள் நிங்ச்சியில் இருக்கின்றன. இங்குள்ள பா யீ வட்டம், திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தென்கிழக்கில் மிக முக்கியமான சந்தையாகும்.

|