திபெத்தின் போத்தலா மாளிகை, நார்பு லிங்கா, சாக்கிய துறவியர் மடம் ஆகியவற்றின் செப்பனிடுதல் திட்டப்பணியில் நடுவண் அரசு 38 கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது.
இது வரை திபெத்தில் தொல் பொருள் பாதுகாப்புக்கு நடுவண் அரசு மேற்கொண்ட பெரிய திட்டப்பணி இதுவாகும். 2002ம் ஆண்டு துவங்கிய இத்திட்டப்பணிக்கு உண்மையில் 33 கோடி யுவானை ஒதுக்கீடு செய்யவே அரசு திட்டமிட்டிருந்தது என்று தெரிய வருகின்றது.
போத்தலா மாளிகை கி.பி 7வது நூற்றாண்டில் கட்டியமைக்கப்படத் துவங்கியது. இது உலக மரபுச் செல்வ பட்டியலில் சேர்க்கப்பட்டது. நார்பு லிங்கா கோயில், உலகில் மிக உயர் இடத்தில் அமைந்துள்ள மிகப் பெரிய மிக முழுமையாக பாதுகாக்கப்பட்ட பூங்கா கட்டிடமாகும். சாக்கிய துறவியர் மடம், புத்த மத திபெத் சாக்கிய பிரிவின் முக்கிய கோயிலாகும் என்று தெரிகின்றது.
|