• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-15 10:51:01    
2009ம் ஆண்டு சுதிர்மான் கோப்பை பூப்பந்து போட்டி

cri
2009ம் ஆண்டு சுதிர்மான் கோப்பை உலக பூப்பந்து போட்டியின் கூட்டு குழு சாம்பியன்பட்ட போட்டி 10ம் நாள் சீனாவின் தென் பகுதியிலுள்ள குவாங் சோ நகரில் அதிகாரப்பூர்வமாக துவங்கியது.
கடந்த போட்டியின் சாம்பியன்பட்டத்தை பெற்ற சீனா, இந்தோனேசியா, ஜப்பான், பிரிட்டன் ஆகியவை பீ பிரிவில் உள்ளன. அனைத்து பிரிவிறும் உள்ள முதல் 2 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டில் பூப்பந்து போட்டியின் சாம்பியன்பட்டத்தை பெற்ற லீங் தாங், தூ சியாங், யூ யாங் உள்ளிட்ட 27 வீரர்களை சீனா அனுப்பி, இப்போட்டியில் கலந்துகொள்கின்றது. இப்போட்டியில், சீனா நல்ல சாதனைகளைப் பெறும் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது.

சுதிர்மான் கோப்பை, ஆடவர் ஒற்றையர், மகளிர் ஒற்றையர், ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர், ஆடவர் மகளிர் கலப்பு ஆகிய போட்டிகள் இடம் பெறுகின்றன. எந்த அணி 5 போட்டிகளில் 3 முறை வெற்றிப்பெறுகின்றதே, இது அடுத்த சுற்றில் நுழையும். பூப்பந்து விளையாட்டின் முழு நிலையின் முக்கிய போட்டியை இது பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றது. 34 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த 500க்கு அதிகமான வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.

17ம் நாள், இந்த போட்டி முடிவடையும்.
மேலதிக நாடுகளும் பிரதேசங்களும் பூப்பந்து விளையாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று உலக பூப்பந்து சம்மேளனத்தின் தலைவரும் தென் கொரியவை சேர்ந்தவருமான Kang Young Joong 10ம் நாள் சீனாவின் குவாங் சோ நகரில் தெரிவித்தார்.
அடுத்த 4 ஆண்டுகளில், பல்வேறு நாடுகளில் பூப்பந்து விளையாட்டை உலக பூப்பந்து சம்மேளனம் பரவல் செய்யப்பாடுபடும். முழு உலக மக்களும் இந்த விளையாட்டுப் போட்டியை விரும்புகின்றனர் என்று Kang Young Joong விருப்பம் தெரிவித்தார். வளர்ச்சி அடையாத நாடுகளிலும், பூப்பந்து விளையாட்டு நடத்தப்படலாம். இந்த நாடுகளின்

குழந்தைகள் இந்த விளையாட்டை கற்றுக்கொள்ள விரும்பலாம். அவர்களின் வளர்ச்சிக்கும் இது துணைபுரியும் என்றும் அவர் தெரிவித்தார்.
சீனாவின் குவாங் சோ நகரில் நடைபெற்ற சுதிர்மான் கோப்பை உலக பூப்பந்து போட்டியின் கூட்டு குழு சாம்பியன்பட்ட போட்டியில் 34 அணிகள் கலந்துகொண்டன என்று அறியப்படுகின்றது. மக்கள் அனைவரின் பொது முயற்சி மூலம், எதிர்காலத்தில், மேலதிக நாடுகளும் பிரதேசங்களும் உலக பூப்பந்து மிகவும் உயர் நிலையான சுதிர்மான் கோப்பையில் கலந்துகொள்ள வேண்டும் என்று Kang Young Joong விருப்பம் தெரிவித்தார்.