Yan Tai நகரின் மின்சார விநியோக நிறுவனத்தின் பெண் பணியாளர்கள்
cri
Shan Dong மாநிலத்தின் Yan Tai நகரில் உள்ள ஒரு மின்சார விநியோக நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களை பற்றி அறிமுகப்படுத்துகின்றோம். Chen Fang Ping அம்மையார், இந்நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பாளர் ஆவார். அவர் நடுத்தர வயதுடையவர். ஒரு துறையில் தொழில்முறை அறிவு கொண்ட மகளிர் பற்றி அவர் கருத்து தெரிவித்தார். "மகளிர், ஒரு சிறப்பு மிக்க குழுவைச் சேர்ந்தவர். பெண் பணியாளர்கள் மேலும் உணர்வுபூர்வமாகவும் கடமையுடனும் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு இது கடினமாக இருக்கின்ற போதிலும், பெண்கள் மகிழ்ச்சியான மனப்பான்மையுடன்,
வாழ்க்கை நடத்தி, வேலை செய்கிறனர் என்று கருதுகின்றேன். தொழில்முறை மகளிர் வேலை செய்வது கடினமானது. இது மட்டுமல்ல, அவர்கள் தங்களது கணவர் மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்கின்றனர். இவை சீன மகளிரின் தலைசிறந்த குணமாகும் என்று கருதுகின்றேன்" என்று அவர் கூறினார். Li Ya Qin அம்மையார், இந்நிறுவனத்தின் சந்தை பிரிவின் கணக்கீட்டு மையத்தின் தலைவி ஆவார். அலுவலகத்திற்கு வெளியே சகோதரி மற்றும் தோழி போல், அவர் இதர பணியாளர்களுடன் பழகுகிறார். ஆனால் பணியில் அவர் கண்டிப்பு மிக்க தலைவி ஆவார். பணியாளர்களைப் பொறுத்த வரை வாழ்க்கையில் அவர் ஓர் அன்பான தோழி. "பணியாளர்களுடன் பொது அக்கறை இருந்தால்தான், அவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்வது என தெரிந்து கொள்ள முடியும். பணியாளர்கள் அனைவரின் பண்புகளையும் அறிந்து கொண்டால், அவர்களுடன் தொடர்பு கொள்வது எளிதானது" என்று அவர் கூறினார்.
ஓய்வு நேரத்தில், மின்சார விநியோக நிறுவனத்தின் பெண் பணியாளர்கள் நகைசுவையோடு பேசி, சிரித்து மகிழ்கிறார்கள். ஆனால் வேலை செய்யும் போது அவர்கள் மிகவும் கடமையுணர்வோடும் சுறுசுறுப்போடும் பணியாற்றுகின்றனர். சுறுசுறுப்பான பெண் பணியாளர்களைக் கண்டு, மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாகவும், அவர்களுக்கு மேலதிக உதவி அளிக்க விரும்புவதாகவும் Li Ya Qin தெரிவித்தார். இம்மின்சார விநியோக நிறுவனத்தில் 300க்கு அதிகமான பெண் பணியாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் அடிக்கடி ஒன்றுகூடி, பல நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, விடுமுறை நாட்களில், அவர்கள் Zhang Yu மது பண்பாட்டு அருங்காட்சியகம், Yan Tai மலை முதலிய இடங்களில் பயணம் மேற்கொள்கின்றனர். சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில், அவர்கள் மலை ஏறுவது, புறநகரில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதுண்டு. ஓய்வு நேரத்தில், அவர்கள் புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களைப் படிக்கின்றனர்.
மின்சார விநியோக நிறுவனத்தின் பெண் பணியாளர்களின் ஓய்வு நேர நடவடிக்கைகள் சிறந்தவை. பணியின் போது அவர்கள் கடமையுணர்வோடு வேலை செய்கின்றனர். Zhang Zhao Mei, Zhang Ying கடந்த பத்துக்கு அதிகமான ஆண்டுகளாக பெரிய அரங்கில் சேவை வழங்கும் ஆலோசனை பணியில் ஈடுபடுகின்றனர். இப்பணி தந்துள்ள மகிழ்ச்சியை அவர்கள் அனுபவிக்கின்றனர். Hao Xiao Ping எனும் பணியாளர் இது பற்றி கருத்து தெரிவித்த போது,"இந்த சேவை பணி கடினமாக இருந்தபோதிலும், நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். மற்றவருக்கு உதவி செய்வது எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. இப்பணியில் அனைவரும் ஒருவொருக்கொருவர் உதவி செய்கின்றனர்" என்று கூறினார்.
இந்த மின்சார விநியோக நிறுவனம், சேவை அளிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். முன்னணி சேவை பிரிவும் பின்னணி சேவை பிரிவும் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த தோற்றத்தை வெளிப்படுத்துகின்றன. இவ்விரு பிரிவுகளிலும் உள்ள அனைத்து பணியாளர்களும் பெண்களே. அவர்கள் பணியின் போது சிறந்த கவனத்தையும், பொறுமை கொண்ட தனிச்சிறப்பையும் முழுமையாக வெளிப்படுத்துகின்றனர். "வாடிக்கையாளரை மகிழ்ச்சியடைய செய்வது", தொலைபேசி மூன்றுமுறை ஒலித்தவுடன், அதனை எடுத்து பேசுவது ஆகிய தனித்தன்மை வாய்ந்த அவர்களின் சேவைகள், வாடிக்கையாளர்களுக்கு வசதி தரும் வேளையில், பணி பயனை பெரிதும் உயர்த்தியுள்ளன.
|
|