• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-18 16:44:34    
சீனாவின் பெருஞ்சுவர் பாதுகாப்புத் திட்டப்பணி

cri
உலகில் புகழ் பெற்ற சீனாவின் பெருஞ்சுவர், உலகில் மிக நீண்டகாலமான இராணுவ வசதியாக விளங்குகிறது. பெருஞ்சுவரின் நீளம் எவ்வளவு?இது பற்றி, நீண்டகாலத்தில் சரிய வரலாற்று தகவல்கள் அல்லது பதில் காணப்பட முடியாது. அண்மையில், இந்த கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில், சீனத் தேசிய தொல் பொருள் ஆணையமும், தேசிய கண்காணிப்பு ஆணையமும் தொடர்புடைய புள்ளிவிபரங்களைக் கூட்டாக வெளியிட்டன. இதன் நீளம், 8 ஆயிரத்து 851.8 கிலோமீட்டராகும். சீனாவின் பெருஞ்சுவருக்கான சரிய நீளத்தின் விபரத்தை சீனா வெளியிடுவது முதல் முறையாகும். தற்போது, நடைமுறைப்படுத்தப்பட்டு பெருஞ்சுவர் பாதுகாப்புத் திட்டப்பணிகளில், இது, ஒன்றாகும். பெருஞ்சுவர் பாதுகாப்புத் திட்டம், குறிப்பிட்டத்தக்க சாதனைகளை பெறுவதை இந்த புள்ளிவிபரம் எட்டியுள்ளது. அதேவேளையில், எதிர்காலத்தில், பெருஞ்சுவரின் ஒட்டுமொத்த பாதுகாப்புத் திட்டத்தை வகுப்பதற்கு, வலிமையான சான்றுகளையும் இந்த புள்ளிவிபரம் வழங்கும்.

கிளிஸ்ட்வுக்கு முன், 7 அல்லது 8ம் நூற்றாண்டில், பெருஞ்சுவரின் கட்டுமானம் துவங்கியது. இதை அடுத்த 2 ஆயிரம் ஆண்டுகளில், இந்த பெரும் திட்டப்பணி தொடர்ந்து கட்டியமைக்கப்பட்டது. பல்வேறு வம்சங்களில், பெருஞ்சுவர் இடைவிடாமல் உருவாக்கப்பட்டது. சீனாவின் பல மாநிலங்கள், தன்னாட்சி பிரதேசங்கள் மற்றும் மாநகரங்களில், பெருஞ்சுவர் இடம்பெறுகின்றது. 14ம் முதல் 16ம் நூற்றாண்டில் கட்டியமைக்கப்பட்ட மின் வம்சத்தின் பெருஞ்சுவர், சீன வரலாற்றில், மிகப் பெரிய, நிலையான பகுதியாக அமைந்தது. இந்த முறை, வெளியிடப்பட்ட புள்ளிவிபரம், மின் வம்சத்தின் பெருஞ்சுவரின் நீளமாகவே ஆகும்.

நண்பர்களே, சீனாவின் பெருஞ்சுவர் பாதுகாப்புத் திட்டப்பணி என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.