• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-18 17:04:01    
சியுசெவ்வின் இணக்க வளர்ச்சி

cri

முற்காலத்தில் சியுசெவ் ou நகர் peng chen நகர் என அழைக்கப்பட்டது. இது, சீனாவின் கிழக்குப் பகுதியின் கடலோர மாநிலமான சியாங் சு மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. சீனாவின் சியாங் சு ,சாங் துங், ஹோ னான், ஆன் வெய் ஆகிய 4 மாநிலங்களின் எல்லைப் பிரதேசங்கள் உருவாக்கிய ஹுவாய் காய் பொருளாதாரப் பிரதேசத்தின் மையமும் ஆகும். பெய்சிங்—ஷாங்காய், லியன் யுன் காங்—லான் சோ ஆகிய இரண்டு இருப்புப் பாதைகள் இங்கு இணைக்கப்பட்டிருக்கின்றன. அதே வேளையில், Xu zhou நகர், சியாங் சு மாநிலத்தில் மூலவளம் மற்றும் எரியாற்றல் வாய்ந்த முக்கிய நகரும் ஆகும். இது, சியாங் சு மாநிலத்தில் ஒரே ஒரு நிலக்கரி உற்பத்தி தளமாகும். குறிப்பிட்ட அளவில் Xu zhou நகரின் தொழிற்துறை மயமாக்கத்தின் வளர்ச்சி போக்கு, அதிக எரியாற்றல் விரைவுபடுத்தியுள்ளது. ஆனால், அதே வேளையில் Xu zhou நகரின் இயற்கைச் சுற்றுச்சூழலும் குறிப்பிட்ட அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையிலான முரண்பாட்டை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி, Xu zhou நகராட்சிக் கட்சிக் கமிட்டியின் செயலாளர் xu ming கூறியதாவது.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில், ஐயமில்லை. Xu zhou நகருக்கு ஒரு தெளிந்த நீர்-மரங்கள் அடர்ந்த மலை என்ற தோற்றம் வழங்கும் வகையில், Xu zhou நகர் அரசு, மாபெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அவர் கூறியதாவது

இசை 2................

Xu zhou நகர் ஒரு நிலக்கரி நகராகும். ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக, Xu zhou நகர் முழுவதிலும் அனைத்து நிலக்கரிக் கொதிகலன்களையும்(BOILER)நாம் மூடிவிட்டோம். தற்போது, இயற்கை எரிவாயு, நிலக்கரி வாயு முதலிய தூய்மையான எரியாற்றல்களை நாம் முக்கியமாகப் பயன்படுத்துகின்றோம். கடந்த சில ஆண்டுகளாக, தெளிந்த நீர்த் திட்டப்பணியை Xu zhou நகர் பெரிதும் நடைமுறைப்படுத்தி வருகின்றது. Xu zhou நகரப்பிரதேசத்தில் 51.4 கிலோமீட்டர் நீளமான கழிவு நீர் இடைமறிக்கும் முக்கிய குழாய் ஒன்று கட்டப்பட்டுள்ளது. கழிவு நீர் கையாளும் 9 பெரிய தொழிற்சாலைகள், முறையே கட்டப்பட்டுள்ளன. அதே வேளையில், குடிநீர் வளம் மற்றும் நீர் தரத்தைக் கட்டுப்படுத்தும் தானியக்க அமைப்பும் கட்டப்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் தூய்மையான குடி நீரைப் பெற முடியும்.

இயற்கை சுற்றுச்சூழலின் மேம்பாடு, Xu zhou நகர் முழுவதன் ஒட்டுமொத்த ஆற்றலையும் பெரிதும் வலுப்படுத்தியுள்ளது. 2004ம் ஆண்டு முதல், FU BU SI எனும் இதழிலுள்ள சீனப் பெருநிலப்பகுதியின் தலை சிறந்த வணிக நகர் வரிசைபட்டியலில் Xu zhou நகர் இரண்டு முறை சேர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2ஆண்டுகளாக, Xu zhou நகர் பெரிதும் பரிந்துரை செய்யப்படும் முதலீட்டு நகராகத் தைவான் மின்னணு தொழில் நிறுவன மன்றத்தால் மதிப்பிடப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு, சீனாவின் தலைசிறந்த வணிக சின்னங்கள் கொண்ட பொருளாதார நகர் என்ற புகழ்மிக்க பட்டத்தைப் பெற்று, சீனாவின் நூறு தலைசிறந்த ஒட்டுமொத்த ஆற்றல் வாய்ந்த நகர்களின் வரிசை பட்டியலில் Xu zhou நகர், மீண்டும் சேர்க்கப்பட்டது.2006ம் ஆண்டு, சீனாவின் 200 தனிச்சிறப்பு ஈர்ப்பு ஆற்றல் வாய்ந்த நகர்களின் வரிசை பட்டியலில் இந்நகர் இடம்பெற்றது. அன்றியும், 2006ம் ஆண்டு, சீனாவின் தலைசிறந்த நாணய துறை நகர்களின் வரிசைபட்டியலில் Xu zhou நகர் சேர்க்கப்பட்டது.

வெளிநாட்டு வணிகர்களை வரவழைத்து முதலீட்டை உட்புகுத்துவது பற்றி கூறிய போது, உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள நண்பர்கள், Xu zhou நகருக்கு வந்து முதலீடு செய்வதற்கு xu ming வரவேற்பு தெரிவித்தார். ஆனால், முதலீடு செய்யப்படும் தொழில் நிறுவனங்கள் மற்றும் திட்டப்பணிகள் பற்றி, திட்டவட்டமான கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார். அவர் கூறியதாவது.

முதலாவதாக, குறைந்த மாசுபாடு, குறிப்பிட்ட தொழில் நுட்பம் வாய்ந்த தொழில் நிறுவனங்களை நாம் வரவேற்கின்றோம். இரண்டாவதாக, வேலை வாய்ப்புகளை அதிகரிக்க கூடிய தொழில் நிறுவனங்களை நாங்கள் வரவேற்கின்றோம்.மூன்றாவதாக, புதிய உயர் தொழில் நுட்பத் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு நாங்கள் முன்னுரிமை வழங்குகிறோம். பல்வேறு துறைகளில் நாங்கள் வசதிகளை வழங்கியுள்ளோம். உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள முதலீட்டாளர்களுக்கு சிறப்பு நிர்வாக மையம், நிறுவப்பட்டுள்ளது. xu zhou நகரின் சிறந்த பொருளாதாரச் சூழல் மற்றும் முதலீட்டுச் சூழல், அன்னிய முதலீட்டாளர்களின் பார்வையை இடைவிடாமல் ஈர்த்து வருகின்றது. இது வரை, உலகின் 500 முன்னணி தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த 13 தொழில் நிறுவனங்கள், 17 திட்டப்பணிகளில் முதலீடு செய்துள்ளன.

மொத்த முதலீட்டு தொகை, 60 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. வாழைவாழையான சர்வதேச நிதி மற்றும் முன்னேறிய உற்பத்தி மேலாண்மை மாதிரி, xu zhou நகரின் பொருளாதாரத்துக்கு மாபெரும் ஈர்ப்பு ஆற்றலை வழங்கியுள்ளன. ஒளிமயமான வரலாற்றுப் பண்பாடு, சிறந்த உயிரின வாழ்க்கைச்சூழல், இணக்கமான நகரின் எழுச்சி, விரைவான வளர்ச்சி கொண்ட பொருளாதாரம் ஆகியவை xu zhou நகருக்கு உயிர் துடிப்பான ஆற்றலை வழங்கியுள்ளன.