• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-18 10:00:41    
ஆசிய கூடைப்பந்து சாம்பியன்பட்ட போட்டி

cri
யோ மீன்னின் கடும் காயத்தால், ஆசிய கூடைப்பந்து சாம்பியன்பட்ட போட்டியில் அவர் கலந்துகொள்ளவில்லை என்று சீன தேசிய விளையாட்டு தலைமை ஆணையகத்தின் கூடைப்பந்து நிர்வாக மையத்தின் துணைத் தலைவர் Hu Jia 11ம் நாள் பெய்சிங்கில் தெரிவித்தார். ஆசிய கூடைப்பந்து சாம்பியன்பட்ட போட்டியில் Wang Zhizhi கலந்துகொள்வது உறுதி. புதிய தேசிய அணி மே திங்கள் இறுதியில் பயிற்சி கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
110 மீட்டர் ஆடவர் தடைதாண்டும் ஓட்ட போட்டியில் சீனாவின் புகழ் பெற்ற வீரர் லீயு சாங் 11ம் நாள் தனது விருப்பத்தை நனவாக்கினார்.

சிச்சுவான் வென்சுவான் கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சீனாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள பெய்சுவான் மாவட்டத்தின் கூய் சீய் வட்டத்து அமைதி விருப்ப துவக்கப்பள்ளிக்கு சென்று, தொண்டர்களின் பிரதிநிதியான லீயு சாங் குழந்தைகளுக்கு விளையாட்டு பற்றிய பாடம் நடத்தினார். தனது பெயரை கொண்ட பல விளையாட்டு பொருட்களையும் இந்த துவக்கப்பள்ளியின் மாணவர்களுக்கு லீயு சாங் வழங்கினார்.
சீனாவின் புகழ் பெற்ற பியானோ இசைக்கலைஞர் Lang Lang 2014ம் ஆண்டு உலக ஆடவர் கூடைப்பந்து சாம்பியன் பட்டப் போட்டியை நடத்தும் உரிமைக்கு விண்ணப்பம் செய்வதில் பரப்புரைத் தூதராக பொறுப்பு ஏற்பதாக பெய்சிங் 2014ம் ஆண்டு உலக ஆடவர் கூடைப்பந்து சாம்பியன் பட்டப் போட்டிக்கான விண்ணப்ப ஆணையம் 12ம் நாள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 16வது உலக ஆடவர் கூடைப்பந்து சாம்பியன் பட்ட போட்டி 2014ம் ஆண்டு செப்டம்பர் 6ம் நாள் முதல், 21ம் நாள் வரை, நடைபெறும். இப்போட்டியில் 24 அணிகள் கலந்துகொள்ளும். தற்போது,

சீனாவின் பெய்சிங், ஸ்பெயினின் மார்லி, இத்தாலியின் ரோம் ஆகிய மூன்று மாநகரங்கள் இந்த போட்டியை நடத்தும் உரிமைக்காக விண்ணப்பம் செய்துள்ளன. சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம் 23ம் நாள் ஸ்விட்சர்லாந்தின் ஜெணிவாவில் இந்த போட்டியை நடத்தும் உரிமையை பெறும் நாட்டை அறிவிக்கும். சீனாவின் 5வது தேசிய சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆயத்த குழுவின் துவக்க விழா 11ம் நாள் சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள பஃ சோ நகரில் நடைபெற்றது. இந்த சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்த பணிகள் சாராம்சரீதியான கட்டத்தில் நுழைவதை இது கோடிட்டுக்காட்டுகின்றது.

சீனத் தேசிய சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது. சீனாவின் 5வது தேசிய சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 2010ம் ஆண்டு செப்டம்பர் திங்களில் பஃ சோ நகரில் நடைபெறும். தடகளப் போட்டி, நீச்சல் போட்டி, பளுதூக்குதல் போட்டி, மேசை பந்து முதலிய 11 போட்டிகள் இந்த சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் உள்ளன. சீனாவின் சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வரலாற்றில் முன் கண்டிராத மிக அதிகமான விளையாட்டு எண்ணிக்கைகளை கொண்ட சிறப்பு ஒலிம்பிக்கு விளையாட்டு போட்டி இதுவாகும்.