• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-20 14:10:56    
வெள்ளி மணிக்கல் சிற்பம்

cri
முள்ளை முள்ளால் எடுப்பது சிறந்த வழிமுறை. வல்லவனுக்கு வல்லவன் எப்போதும் உலகில் உண்டு. பின் வரும் கதை இந்த கருத்துக்களுக்கு வலு சேர்க்கும் கதையாகும்.
முன்பொரு காலத்தில் ஷாவ்ஷியாங் என்ற நகரில் விலைமதிப்பான ஒரு ஜேட் எனப்படும் வெள்ளி மணிக்கல் சிற்பத்தை அடகுக்கடைக்கு கொண்டு சென்றான் ஒருவன். அடகுக்கடையின் உரிமையாளர் கடையில் அப்போது இல்லை. அவனது உதவியாளனே கடையை பார்த்துக்கொண்டிருந்தான். ஆக இந்த விலைமதிப்பான சிற்பத்தை கொண்டுவந்த வாடிக்கையாளன், கடையில் இருந்தவனிடம், அந்த சிற்பம் ஹான் வம்சத்தை சேர்ந்தது என்றும் 2000 ஆண்டுகால பழமையான இந்த சிற்பம் தனது தந்தையிடமிருந்து கிடைத்த பரம்பரை சொத்து என்றும் குறிப்பிட்டான். எனவே இவ்வளவு பழமையும், பெருமையும் வாய்ந்த தனது வெள்ளி மணிக்கல்லால் செய்யப்பட்ட சிற்பத்துக்கு 1000 வெள்ளிகள் கேட்டான் அந்த வாடிக்கையாளன். விலைமதிப்பான வெள்ளி மணிக்கல்லால் செய்யப்பட்டதால் பார்க்க அழகா இருந்தது அந்த சிற்பம். எனவே தந்து முதலாளி இல்லாத நிலையிலும், நல்ல பொருள்தானே எனவே 1000 வெள்ளியை கொடுத்து அடகாக அந்த சிற்பத்தை வாங்கி வைத்துக்கொண்டான், அடகுக்கடையிலிருந்த உதவியாளன்.
பின்னர் கடைக்கு திரும்பிய உரிமையாளன், தனது உதவியாளன் அடகுபிடித்து வைத்திருந்த அந்த வெள்ளிமணிக்கல் சிற்பத்தை ஆய்வு செய்தான். பார்க்க மிகவும் விலைமதிப்பானதாக தோன்றிய அந்த சிற்பம், பழமையானது என்பது மட்டுமே உண்மை. மலிவான கல்லால் செய்யப்பட்ட அந்த சிற்பம் உண்மையில் ஒரு போலி. 100 வெள்ளிக்காசு பெறாத அந்த சிற்பத்துக்கு தனது உதவியாளன் 1000 வெள்ளிக்களை வாரி வழங்கியது கண்டு கோபமும் கடுப்பும் கொண்ட உரிமையாளன், ஒருவேளை அந்த ஏமாற்று வாடிக்கையாளன் திரும்ப வந்து தனது போலி சிற்பத்தை அடகாக வாங்கிய 1000 வெள்ளியை செலுத்து மீட்டு செல்லாவிட்டால், நீதான் அந்த பணத்தை தரவேண்டும் என்று உதவியாளனை எச்சரித்தான்.
ஏமாந்து போனது ஒருபுறம், இனி அதற்காக ஏழையான தானே பணம் கொடுத்து தண்டனை அனுபவிக்க வேண்டுமே என்ற வேதனை ஒருபுறம். உதவியாளன் சோகவடிவாய் தன்னுடை நண்பனிடம் உதவி கேட்டு ஓடினான்.
அவனது நண்பனான ஷுயு வென்ச்சாங், மதிநுட்பத்துக்கும், பரந்த அறிவுக்கும் பெயர் பெற்றவன். நண்பனான இந்த அடகுக்கடையின் உதவியாளன் கூறியதை கேட்ட ஷுயு வென்ச்சாங், சிறிது நேரம் யோசித்த பின், நண்பனுக்கு உதவ எண்ணி ஒரு திட்டம் தீட்டினான்.
திட்டத்தின் படி, சில நாட்கள் கழித்து அடகுக்கடையின் உரிமையாளன் தனது நண்பர்கள், உறவினர்களுக்கு விருந்தொன்றில் பங்கேற்குமாறு கோரும் அழைப்பிதழை அனுப்பினான்.
"தற்காலிகமாக என் வசமுள்ள ஹான் வம்சக்காலத்து, மிக அரியதொரு வெள்ளிமணிக்கல் சிற்பத்தை கண்டு ரசிக்கவும், விருந்துண்டு மகிழவும் அன்போடு அழைக்கிறேன்" என்று கூறும் அழைப்பிதழை பெற்ற பலரும், அடகுக்கடையின் உரிமையாளனது வீட்டுக்கு வந்தனர். விருந்தருந்தியபடி மகிழ்ச்சியாக இருந்தவேளையில் அடகுக்கடை உரிமையாளன், விருந்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றியும் மகிழ்ச்சியும் தெரிவித்ததோடு, மிக அரிய சிற்பமாக உறுதி செய்யப்பட்ட தன்வசமுள்ள சிற்பத்தை அதன் உரிமையாளர் திரும்பப்பெறப்போவதால், தான் அனைவரையும் அதை கண்டுகளிக்க அழைத்ததாக கூறி தன் அறையில் இருந்த வெள்ளிமணிக்கல் சிற்பத்தை கொண்டு வந்து விருந்தினர்களிடம் பார்க்கக் கொடுத்தான்.
பார்ப்பவர்களின் கண்களில் வியப்பேற்படுத்தி அந்த சிற்பம், ஒவ்வொருவராக கைமாறிச் சென்று கடைசியில் அடகுக்கடை உரிமையாளனிடம் வந்தது. சிற்பத்தை அருகிலிருந்த மேசையில் வைக்கச் சென்றபோது, தடுமாறி அவன் கீழே விழ, அவன் கைலிருந்த வெள்ளிமணிக்கல் சிற்பம், தரையில் விழுந்து சிதறியது. சுற்றியிருந்த அனைவரும் வியப்பும், அதிர்ச்சியும் தொனிக்க, ஆ என்று குரலெழுப்ப, விலை மதிப்பான வெள்ளி மணிக்கல் சிற்பம் தரையில் சுக்குநூறாக கிடந்தது. அடகுக்கடை உரிமையாளனின் முகம் மாற, பலமிழந்து நோயாளி போல உணர்ந்த அவன் தன் வேலையாட்களை அழைத்து தன்னை தூக்கி உள்ளே படுக்கைக்கு கொண்டு செல்லுமாறு கூறினான். விருந்து வந்தவர்கள் நிகழ்ந்ததை கண்டு அதிர்ச்சியும், விருந்துக்கு அழைத்த அடகுக்கடை உரிமையாளனின் நிலையைக் கண்டு வருத்தமும் அடைந்து வீடு திரும்பினர். மறுநாள் இந்த சம்பவம் நகர் முழுதும் செவிவழிச் செய்தியாக, கதையாக பரவியது. எல்லோரும் இந்த உடைந்து போன வெள்ளிமணிக்கல் பற்றியே பேசத் தொடங்கினர்.
சில நாட்கள் கழித்து, 100 வெள்ளி பெறாத போலி வெள்ளிமணிக்கல் சிற்பத்தை 1000 வெள்ளிக்கு ஏமாற்றி அடகுவைத்த வாடிக்கையாளன் அடகுக்கடைக்கு சென்றான். தன்னிடமிருந்த 1000 வெள்ளிக்காசுகளை கடையில் இருந்த உதவியாளனிடம் கொடுத்து தன்னுடைய வெள்ளிமணிக்கல் சிற்பத்தை மீட்க வந்ததாகவும், உடனே அதை தரும்படியும் கூறினான். உதவியாளன் எதுவும் பேசாமல் ஆயிரம் வெள்ளிக்காசுகளை சரியாக இருக்கிறதா என்று எண்ணிப்பார்த்தபின் உள்ளே சென்று வாடிக்கையாளனின் வெள்ளிமணிக்கல் சிற்பத்தை கொண்டு வந்து கொடுத்தான். வாடிக்கையாளனுக்கு முகத்தில் ஈயாடவில்லை. அதிர்ச்சியில் வாயடைத்து நின்றான். அடகுக்கடையின் உரிமையாளன் வீட்டில் அளித்த விருந்த்தில்தான் இந்த சிற்பம் கீழே விழுந்து உடைந்து சிதறிவிட்டதே, மறுபடி எப்பட் இப்படி முழுமையான சிற்பமானது? என்றபடி சிற்பத்தை பார்த்தா அவன் அது தான் ஏமாற்றி அடகு வைத்தே அதே சிற்பம்தான் என்பதை அறிந்து குழம்பினான். அடகாக பெற்ற காசையும் திருமப் பெற்றாயிற்று, இனியும் மறுபடி 1000 வெள்ளிக்காடுகளுக்கு இதை ஏமாற்றி அடகுவைத்து, கம்பி நீட்டமுடியாது, வேறு வழியே இல்லை என்று நொந்தபடி வீடு திரும்பினான் ஏமாற்று வாடிக்கையாளன்.
உண்மையில் விருந்தில் கீழே விழுந்து உடைந்ததும் ஒரு போலி சிற்பம்தான். சாதாரண போலியல்ல, அந்த வாடிக்கையாளன் ஏமாற்றி அடகு வைத்தை போலியின் போலி. இக்கட்டான நிலையில் மாட்டிக்கொண்ட தன் ஏழை நண்பனான கடையின் உதவியாளனுக்கு அறிவாளி ஷுயு வென்ச்சாங் உதவி செய்யும் நோக்கில் தீட்டிய திட்டம், ஏமாற்று வாடிக்கையாளனை மறுபடி கடைக்கு வரச் செய்து, பணத்தை திரும்பச் செலுத்தி, போலியை கொண்டுசெல்ல வைத்தது. வாடிக்கையாளன், ஏற்கனவே ஏமாற்றி பெற்ற 1000 வெள்ளிக்காசோடு, அடகு வைத்தை சிற்பத்தை உரிமையாளன் உடைத்து விட்டதால், தன் பொருளை அவன் உடைத்தான என்பதை காரணமாக்கி மேலும் பணம் பார்க்கலாம் என்று எண்ணியதால் , ஷுயு வென்ச்சாங் விரித்த வலையில் மாட்டிக்கொண்டான்.
பேராசை பெருநட்டம், வல்லவனுக்கு வல்லவன் நிச்சயம் உலகில் உண்டு.