• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-20 15:26:15    
போல்ட் பற்றிய செய்திகள்

cri
புகழ் பெற்ற ஜமைக்கா வீரர் போல்ட், காயத்திலிருந்து மீட்ட பின், கலந்துகொண்ட முதல் போட்டியில், மக்களின் மனதில் ஆழப்பதிந்திருந்திருக்கிறார். 17ம் நாள் பிரிட்டன் மன்டெஸ்டர் நகரில் நடைபெற்ற 150 மீட்டர் தடகள போட்டியில், உலகின் மிக சிறந்த சாதனையை அவர் எளிதாக உருவாக்கினார்.

அன்று அவர், 14.35 வினாடி என்ற சாதனையை கொண்டு, 1983ம் ஆண்டில் இத்தாலி வீரர் பீட்ரோ மென்னியா உருவாக்கிய 14.80 வினாடி என்ற உலக சாதனையை முறியடித்தார்.
2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் 100 மீட்டர் தடகள போட்டியில் கலந்துகொள்ளாமல், இருக்க கூடும் என்றும் ஆடவர் 400 மீட்டர் தடகள போட்டியில் கலந்துகொள்வார் என்றும் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கத்தை பெற்றவரும், ஜமைக்காவின் புகழ் பெற்ற வீரருமான போல்ட், தெரிவித்திருக்கின்றார்.

NBA சம்மேளனத்தின் இவ்வாண்டுக்கான இறுதிப்போட்டிக்கு முந்தைய கிழக்கு பகுதியின் காலிறுதிப்போட்டியின் 7வது போட்டியில், கடந்த ஆண்டின் சாம்பியன் பட்டம் பெற்ற போஸ்டன் செல்திக் அணி, 82-101 என்ற புள்ளிகள்கணக்கில் ஓலன்தோ மேஜிக் அணியிடம் தோல்வியடைந்தது. 7 ஆட்டங்களில் அதிக வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், 3-4 என்ற ஆட்டக்கணக்கில் போஸ்டன் செல்திக் அணி, தோல்வியடைந்தது.
2009ம் ஆண்டு ஜெர்மனி உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின், 4வது நாளான போட்டி 18ம் நாள் ஜெர்மன் முன்னிஷு நகரில் முடிவடைந்தது. சீன இளம் வீராங்கனைகள் யுயன் ஜிங், சாவ் சு, 25 மீட்டர் கை துப்பாக்கி சுடுதல் போட்டியின் முதல் மற்றும் 2வது இடங்களை வகித்தனர்.

சுதிர்மன் பூப்பந்து 11வது சாம்பியன்பட்டப்போட்டி 17ம் நாளிரவில் சீனாவின் தென்பகுதியிலுள்ள குவாங் சாவ் மாநகரில் முடிவடைந்தது. சீன அணி, இறுதிப்போட்டியில் 3-0 என்ற ஆட்டக்கணக்கில் தென்கொரிய அணியை தோற்கடித்து, 7வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.
பூப்பந்து விளையாட்டு துறையின் ஒட்டுமொத்த நிலையை பிரதிநிதிப்படுத்தும் மிக சிறந்த உலக போட்டி, சுதிர்மன் பூப்பந்து சாம்பியன் பட்டப்போட்டியாகும். 34 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 500 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.