• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-22 09:20:02    
2009ம் ஆண்டு மாத்ரிட் மாஸ்டர் டென்னிஸ் போட்டி

cri
2009ம் ஆண்டு மாத்ரிட் மாஸ்டர் டென்னிஸ் போட்டி முடிவடைந்தது. ஸ்விட்சர்லாந்து வீரர் பெடரர் 1 மணி 28 நிமிட காலம் நீடித்த போட்டியில் 2-0 என்ற ஆட்டக்கணக்கில் ஸ்பெனிய வீரர் நாடாலை தோற்கடித்து, சாம்பியன்பட்டம் பெற்றார்.
18ம் நாள் நடைபெற்ற வார்சாவ் மகளிர் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றுப்போட்டியில், சீன வீராங்கனை சேன் ச்சியை, முதல் ஆட்டத்தில் தோல்விபெற்ற நிலைமையில், 2-1 என்ற ஆட்டக்கணக்கில், பெலாரஸ் இளையான வீராங்கனை கோவொர்சோவாவை தோற்கடித்தார். இதன் மூலம், சேன் ச்சியை முதல் 16 இடங்களில் நுழைந்துள்ளார்.

இவ்வாண்டு, சீன பெய்ஜிங் மற்றும் இஸ்தான்பூல் நகரங்களில், இரண்டு ஆசிய-ஐரோப்பிய மேசைபந்து போட்டிகள் நடைபெறும். ஜெர்மனியின் புகழ்பெற்ற வீரர் திமோ போல் உள்ளிட்ட புகழ் பெற்ற ஐரோப்பிய வீரர்கள் இப்போட்டிகளில் கலந்துகொள்வர்.
திட்டப்படி, முதல் போட்டி, ஆகஸ்ட் 25, 26ம் நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெறும். நவம்பர் 10, 11ம் நாட்களில் இஸ்தான்புல் நகரில் 2வது போட்டி நடைபெறும்.
18ம் நாள், புதிதாக உருவாகிய சீன தேசிய ஆடவர் கால்பந்து பயிற்சியாளர் குழு, முதல் கூட்டத்தை நடத்தியது. மே திங்களிறுதி முதல், ஜூன் திங்கள் துவக்கம் வரை,

ஐரோப்பாவில் 2வது இடத்தை பெற்ற ஜெர்மனி, ஈரான், சௌதி அரேபியா ஆகிய அணிகளுடனான போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களின் பெயர் பட்டியலை பயிற்சியாளர் குழு விவாதித்தது. நெதர்லாந்து என்த்ஹோவன் கால்பந்து மன்றத்தில் விளையாடுகின்ற சீன வீரர் சாவ் ஹய் பின், பிரிட்டன் ஷார்டன் கால்பந்து கிளபில் விளையாடுகின்ற சேன் சி ஆகிய வீரர்கள், இப்பெயர் பட்டியலில் சேர்க்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலிய ஜுவன்துஸ் கால்பந்து கிளப், தனது தலைமைப் பயிற்சியாளர் கிளெடியோ ரானிரியைரியின் பதவி நீக்கம் செய்வதாக 18ம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. இவ்வாண்டு இத்தாலி கால்பந்து தொடர்போட்டியில்,

ரானிரியைரித் வழிநடத்திய ஜுவன்துஸ் அணி, சாதாரணமாக விளையாடி, சாம்பியன் பட்டம் பெறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.
NBA சம்மேளனத்தின் இவ்வாண்டுக்கான இறுதிப்போட்டிக்கு முந்தைய கிழக்கு பகுதியின் காலிறுதிப்போட்டியின் 7வது போட்டியில், கடந்த ஆண்டின் சாம்பியன் பட்டம் பெற்ற போஸ்டன் செல்திக் அணி, 82-101 என்ற புள்ளிகள்கணக்கில் ஓலன்தோ மேஜிக் அணியிடம் தோல்வியடைந்தது. 7 ஆட்டங்களில் அதிக வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், 3-4 என்ற ஆட்டக்கணக்கில் போஸ்டன் செல்திக் அணி, தோல்வியடைந்தது.