Zinder நகரில் நீர் வினியோகத் திட்டப்பணி உள்ளூர் மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தியதோடு, Yang Fenglan உள்ளிட்ட சீனப் பொறியியலாளருக்கு மதிப்பையும் புகழையும் கொண்டு வந்துள்ளது. இருநாடுகளுக்கிடையில் அதன் மூலம் ஊன்றப்பட்ட நட்புறவின் வித்து பெரும் மதிப்புள்ளது. Zinder நகரில் நீர் வினியோகத் திட்டப்பணியின் கட்டுமானக் காலத்தில், உள்ளூர் காலனிலை மற்றும் சூழ்நிலை பொருந்தாததால், Yang Fenglan 2 முறை மலேரியா நோயால் பீடிக்கப்பட்டார். திட்டப்பணியைக் கைவிட்டு நாடு திரும்பி விடலாம் என்று அவர் எண்ணினார். ஆனால் இறுதியில் அவர் பணியில் ஊன்றி நின்றார். அவருக்கு எது ஆதரவாக இருந்தது என கேட்கப்பட்ட போது, Zinder நகரில் தங்கியிருந்த 21 திங்களில் உள்ளூர் மக்கள் பலருடன் பழகியதையும், இன்னல் மிகுந்த காலத்தில் அவர்கள் தனக்கு தொடர்ந்து பணி செய்யக் கூடிய துணிவை வழங்கியதையும் Yang Fenglan குறிப்பிட்டார். அவர் கூறியதாவது— "இந்தத் திட்டப்பணியில் நான் பெரும் கவனத்தையும் உற்சாகத்தையும் செலுத்தினேன். இதன் மூலம் ஆப்பிரிக்காவையும் ஆப்பிரிக்க மக்களையும் அறிந்து கொண்டேன். ஆப்பிரிக்க மக்கள் எளிமை மற்றும் கனிவான இதயம் கொண்டவர்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். பல இன்னல்களை நான் சந்தித்தேன். எடுத்துக்காட்டாக மலேரியா நோயால் அவதிப்பட்டேன். அப்போது எனது உடல் நிலை மோசமாகியது. ஆனால் மக்கள் அனைவரும் என் மீது கவனம் செலுத்தினர். திருமதி Yang பற்றி அவர்கள் அனைவரும் அறிந்து கொண்டுள்ளனர். இன்னல் நிலையிலான அவர்கள் எனக்கு அன்பளிப்புகளையும் உணவுப் பொருட்களையும் வழங்கினர். வரிசையாக எனது வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்தனர். நான் மனம் உருகினேன்" என்றார் அவர்.
2006ஆம் ஆண்டில் Yang Fenglan அம்மையார் 4வது முறையாக Zinder நகருக்குச் சென்றார். அங்கே சென்றடைந்த போது இரவு நேரமாகியிருந்தது. ஆனால் எதிர்பாராதவாறு, உள்ளூர் மக்கள் பலர் அவர் தங்கியிருக்கும் சீன மருத்துவ சிகிச்சைக் குழுவின் தங்குமிடத்தில் அவரை வரவேற்றனர். திருமதி Yang வருவார் என்ற செய்தியை அறிந்து கொண்ட பின் அவர்கள் தாமாகவே அங்கே ஒன்று கூடினர். இது பற்றி Yang Fenglan நினைவு கூறியதாவது— "வாகனத்திலிருந்து இறங்கிய பின் பலரைக் கண்டறிந்தேன். மருத்துவ சிகிச்சைக் குழுவின் தங்குமிடம் ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ளது. ஏன் அதிகமான மக்கள் இருக்கின்றனர் என எண்ணினேன். உள்ளூர் மக்கள் பலரை நான் பார்த்து அடையாளர் கண்டு கொண்டேன். அவர்களில், என்னுடன் சேர்ந்த வேலை செய்தவர்,
நான் தங்கியிருந்த முற்றத்தில் வாழ்ந்தவர் ஆகியோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் என்னை அன்போடு நலம் விசாரித்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் தங்கியிருந்த இடத்தை அவர்கள் சுத்தம் செய்தனர். முன்பிருந்தது போலவே படுக்கையை வைத்தனர். நான் தொடர்ந்து அங்கே தங்கியிருக்க வேண்டும் என அவர்கள் விரும்பினர். நான் மனம் உருகினேன்" என்றார் அவர். பேட்டியின் போது, Yang Fenglan அம்மையார் பேசுகையில், Zinder நகரில் தங்கியிருந்த 21 திங்கள் காலமும் இரவும் பகலும் தன்னுடன் பழகிய உள்ளூர் மக்களை தாம் நினைத்து பார்ப்பதாக கூறினார். சீன வானொலி நிலையத்தின் மூலம் நைஜர் நாட்டிலுள்ள நண்பர்களுக்கு வணக்கங்களைக் கூற விரும்பி அவர் கூறியதாவது— "21 திங்கள் காலம் என் மீது கவனம் செலுத்திய உங்களுக்கும் எனக்கு ஆற்றல் வழங்கிய Zinder நகருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்களை நான் நினைக்கின்றேன். இன்பமாகவும் உடல் நலமாகவும் வாழ வாழ்த்துக்கள்" என்றார் அவர். 1 2
|