
லாசா நகரிலுள்ள தேஜீ வீதி, உள்ளூர் தனிச்சிறப்பான உணவு வகைகளைக் கொண்டதால் புகழ்பெற்றது. பல்வேறு சுவையான பல்வகை உணவுவகைகள் இங்கு உள்ளன. இப்பொழுது, லாசா நகரவாசிகள் அடிக்கடி இவ்வீதியில் விருந்தினர்களுக்கு விருந்து அளிக்கின்றனர்.
லாசாவின் வணிகப்பொருட்கள் வீதி

பாகோ வீதி, லாசாவில் சிறிய வணிகப் பொருட்களை விற்பனை செய்யும் மிகவும் புகழ்பெற்ற வீதியாகும். பயணிகளைப் பொறுத்தவரை, மத வழிப்பாட்டில் பயன்படுத்தப்படும் பொருட்கள், தாங்கா என்னும் ஓவியங்கள் இவ்வீதியில் ஈர்ப்பாற்றல் மிக்க பொருட்களாகும். தவிர, உள்ளூர் தனிச்சிறப்பியல்பு மற்றும் தேசிய இன பாணியுடைய கம்பளம், திபெத் கத்தி, திபெத் இன ஆடை, நகை முதலிய பாரம்பரிய கைவினை கலைப்பொருட்களை, பயணிகள் இவ்வீதியில் வாங்கலாம்.

|