• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-22 16:48:35    
புயி இனத்தின் விழாக்கள்

cri

புயி இனம், சீன குடும்பத்தில் துணிவு உறுதிப்பாடு ஆகியவை உடைய நீண்ட வரலாற்றை கொள்கின்ற இனமாகும். அது, பழங்காலத்தின் பெய்யெ இனத்திலிருந்து வளர்ந்தது. 1953ம் ஆண்டில் அது அதிகாரபூரவமாக புயி என்ற பெயராக மாறியது. நீண்ட கால வரலாற்றில், புயி இனம் குடியேறி வளர்ந்து வருகிறது.

அது, சொந்த இனத்தின் சிறந்த பண்பாட்டை நிலைநிறுத்திய அதேவேளை, பிற இனங்களின் சிறந்த பண்பாட்டு சிற்பபுகளையும் உட்கொண்டது. புயி இனத்தின் விழாக்கள், நீண்டகால சமூக வளர்ச்சி போக்கில் ஏற்பட்ட தனிச்சிறப்பு வாய்ந்த விழாக்களாகும். வசந்த விழா, சந்திர நாட்காட்டியின்படி 3ம் திங்களின் 3ம் நாள், 6வது திங்களின் 6வது நாள், chixin விழா முதலியவை புயி இன மக்களின் முக்கிய விழாக்களாகும். அவற்றில் வசந்த விழாவும், 6வது திங்களின் 6வது நாளும், மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டவை.

Chabaige விழா

இது, குய் சோ மாநிலத்தின் பாரம்பரிய விழாவாகும். சந்திர நாட்காட்டியின்படி 6ம் திங்களின் 21 முதல் 23ம் நாள் வரை கொண்டாடப்படுகிறது. விழாவின் போது, சுமார் 10 மாவட்டங்கள், யுன்னான் மற்றும் குவாங் சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள் நடவடிக்கைகளில் கொண்டாடுகின்றனர்.

விழாவின் போது, ஒவ்வொரு குடும்பமும் ஆடைகளையும் கட்டில் விரிப்புகளையும் தூப்புரப்படுத்தி தொங்குகின்றனர். அவை வெள்ளை மேகமூட்டம் போல் தூய்மையை பொருட்படுகின்றன. பாடல் போட்டி, இவ்விழாவுக்கான முக்கிய நடவடிக்கையாகும். உபசரிப்பு குடும்பங்கள், வெண்ண சோறுகளை சமைத்து, மதுபானவை அளிக்கின்றனர். வணிக பொருளாதாரத்தின் வளர்ச்சியுடன், புயி இன மக்கள் கொண்டாட்டங்களை தவிர, சுற்றுலா, பொருட்களை வங்குதல் முதலியவை மேன்மேலும் அதிக வரவேற்பு பெற்றன.

வசந்த விழா

இலையுதிர்காலத்தின் அறுவடைக்குப் பின்பு தான், புயி இன மக்கள் இந்த விழாவை ஆயத்தப்படுத்த துவங்கினர். சந்திர நாட்காட்டியின்படி கடைசி திங்களின் 23ம் நாள் சமைக்குப் பொறுப்பான கடவுளை வழிபடுகின்றனர். புத்தாண்டின் முதல் நாளுக்கு பின், குழந்தைகள் உற்றவினர்களின் குடும்பங்களுக்குச் சென்று நல்வாழ்த்துக்களையும் மதிப்பையும் வெளிப்படுத்துகின்றனர். சில பிரதேசங்களிலான புயி இன மக்கள், ஹான் இனத்தைப் போலவே 15 நாட்காளாக வசந்த விழாவைக் கொண்டாடுகின்றனர்.