• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-24 19:24:41    
பெய்ஜிங் வந்தடைந்த முனுகப்பட்டு பி. கண்ணன் சேகர்

cri

சீன வானொலி 2008ம் ஆண்டு நடத்திய அழகான சிச்சுவான் எனும் பொது அறிவுப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற முனுகப்பட்டு பி கண்ணன் சேகரான நான் மே 23ம் நாளிரவு சென்னையிலிருந்து புறப்பட்டு 24ம் நாள் பிற்பகல் பெய்ஜிங் பத்திரமாக வந்தடைந்தேன்.

விமான நிலையத்தில் தமிழ்ப் பிரிவுத் தலைவர் தி. கலையரசி அவர்கள் என்னை வரவேற்றார். பிரமாண்டமான பெய்ஜிங் சர்வதேச விமான நிலையம் பார்த்து வியப்படைத்ததோடு அது என்றுமே என் மனதில் ஆணி போல பரிந்து விட்ட முதலாவது சீனக் காட்சி இடமாக விளங்கும். சீனாவில் தங்கியிருக்கும் ஒரு வாரம் காலம் எனக்கு இன்பமான மகிழ்ச்சிகரமான காலமாகும் என்பதில் எனக்கு ஐயமே இல்லை. குறுகிய காலம் இருந்தாலும் சீனா வந்து பார்ப்பது என் முழுவாழ்க்கையில் லட்சிய கனவாக கருதுகின்றேன். இப்போது இந்த கனவு நனவாகியுள்ளது. என் வாழ்க்கை என்றுமே சீனாவுடன் இணைந்து விட்டது என்பதைக் கூறுவது பொருத்தமாகும்.

சரி நண்பர்களே இன்று முதல் சீனாவை விட்டு இந்தியாவுக்கும் திரும்பும் வரையான நாட்களில் என் சீனச் சுற்றுலா பயண அனுபவத்தை நாள்தோறும் வானொலி மூலம் வழங்க வாய்ப்பு அளித்துள்ள சீன வானொலிக்கு நன்றிகள். இதனை நீங்களும் கேட்டு மகிழலாம். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். எனது பயணத்துக்கு ஆதரவும் ஆலோசனையும் வாழ்த்துக்களையும் கூறிய வளவனுர் புதுப்பாளையம் செல்வம், பெருந்துரை பல்லவி பரமசிவன், சேந்தமங்கலம் ரவிச்சந்திரன், திருச்சி தேவராஜா, காஜாமலை பிரபாகரன், சீதாராமன், சக்கரபாணி குறிஞ்சிகுமரன், ராதாகிருஷ்னன், பேளுக்குறிச்சி செந்தில் வேலு, பகலாயூர் நாச்சிமுத்து, ஓடையக்காடூர் ராமசாமி, ஈரோடு சுரேஷ் குமார், ராகம்பாணியப்பன் குனசீரன், பாண்டிசேரி பால குமார், திண்டுக்கள் பகத்சிங், திருவைகாவூர் முருகானந்தன், தார்வழி் முத்து, முனைவர் ந.கடிகாசலம், நந்தியாலம் தணிகாசலம், மீனாட்சிபாளையம் கா அருன், கே.கே.போஜன், தென்பொன்முடி மணிகண்னடன், தருமபுரி அழகேசன், ஊத்தங்கரை கவிசெங்குத்துவன், சிறுநாயன்பட்டி வேலுச்சாமி, வேலூர் டாக்டர் பி.அருச்சுனன், விழுப்புரம் ஜமில் அகமது, ஆரணி ஜெ அண்ணாமலை, பொன்தங்கவேலன், வளவணூர் முத்து சிவகுமார்.