• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-25 16:35:07    
பெருஞ்சுவர் பற்றி

cri

வணக்கம் முனுகப்பட்டு P.கண்ணன் சேகர் சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து பேசுகிறேன். இன்றைய தினம் எனது பயணத்திட்டத்தின் படி, சீனாவின் வரலாற்று புகழ் மிக்க பாரம்பரிய சீனப் பெருஞ்சுவரைப் பார்க்க, நிலைய பணியாளர் சகோதரர் கலைமணி அவர்களுடன் சென்றேன். என்னுடன் 10 மொழிப் பிரிவு நேயர்களும் பணியாளர்களும் வருகை தந்தனர்.

தென்கிழக்கு ஆசியப் பகுதியிலே இந்த முறை இலவச பயணத்திற்கு, சீன வானொலி தமிழ்ப்பிரிவுக்காக என்னை தேர்வு செய்துள்ளனர் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சீனப் பெருஞ்சுவர் பகுதியை அடைந்ததும் எனக்கு மகிழ்ச்சியும் வியப்பும் அதிகமானது. காரணம் பள்ளியில் படித்தும் படங்களில் பார்த்தும் சீன பெருஞ்சுவரை அறிந்திருக்கிறேன். தற்போது நேரில் பார்த்த போது ஏற்பட்ட வியப்பு இன்னும் மறையவில்லை.

காரணம் அறிவில் நுட்பம் முன்னேற்றம் அடையாத அக்கால கட்டத்தில் இந்த பெருஞ்சுவர் மிக பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் இன்னும் உறுதியாக நிலைத்து இருப்பது ஆச்சரியம் தான். அதோடு சுற்றுச் சூழல் மாசு ஏற்படா வண்ணம் அங்கே மிகத் தூய்மையான முறையில் கையாண்டு பெருஞ்சுவரின் தனித்தன்மையை பாதுகாத்து வருவது பாராட்டதக்கது.

சீனப் பெருஞ்சுவர் செல்லும் பாதையில் ஒலிம்பிக் காலத்தின் போது மிகப் பெரிய அளவில் "ஒரே உலகம் ஒரே கனவு" என்ற வாசகம் வைக்கப் பட்டுள்ளது. இது ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற போது வைக்கப்பட்டது மிக பெருஞ்சுவர் பகுதியில் வைக்கப்பட்டது மிகப் பொருத்தம் என நினைக்கிறேன்.

காரணம் பல நாட்டு மக்கள் உலக அதிசய சீனப் பெருஞ்சுவரை காண வரும் போது இந்த "ஒரே உலகம் ஒரே கனவு"என்ற வாசகம் மிகப் பொருத்தமாக அமையும் பல ஆயிரம் வருடங்கள் சென்றாலும், காலத்தால் அழிக்கமுடியாத சீனப் பெருஞ்சுவர் உறுதியைப் போல் சீன இந்திய நட்புறவு அமையும் என வாழ்த்தி விடை பெறுகிறேன்.

நன்றி வணக்கம்