• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-02 10:25:19    
ஹுவாங்ஷான் மலையின் காட்சிப் பிரதேசம்

cri

ஹுவான்ஷான் மலை, சீனாவில் புகழ்பெற்ற காட்சி இடங்களில் ஒன்றாகும். அது, உலகில் புகழ்பெற்ற சுற்றுலா இடமும் கூட.

இந்த சுற்றுலா இடத்தில் மிக முக்கியமான லியன்ஹுவா மலைமுகடு, கடல் மட்டத்திலிருந்து 1873 மீட்டர் உயரத்தில் உள்ளது.

ஹுவாங்ஷான், பருவகால வானிலை உள்ள துணை வெட்ப மண்டலத்தில் இருக்கிறது. அங்கு அதிக மழை பெய்கிறது. இதனால், பல்வேறு புகழ்பெற்ற மலைகளின் காட்சிகளை கொள்கிறது. எனவே உலகில் முதல் அதிசயமான மலை என அழைக்கப்படுகிறது. அங்கு, வசந்தகாலம், கோடைகாலம், இலையுதிர்காலம், குளிர்காலம் ஆகிய நான்கு பருவகாலங்களும் வேறுப்படுகின்றன. தவிர, ஹுவாங்ஷான் மலை, இயற்கையான விலங்கியல் பூங்கா எனவும், உலக உயிரியல் பூங்கா எனவும் அழைக்கப்படுகிறது. அங்கு, சுமார் 1500 வகைகள் தாவரங்களும், 500க்கு மேலான வகை விலங்குகளும் உள்ளன.

மக்கள் வாழ்வதற்கேற்ற காலநிலை மலைப் பிரதேசத்தில் நிலவுகிறது. எனவே, புகழ்பெற்ற கோடை வாழிடமாக விளங்குகிறது. சீனாவின் தேசியளவிலான சுற்றுலா இடங்களில் இதுவும் ஒன்று.

1985ம் ஆண்டு, இது, சீனாவின் முதல் 10 காட்சி இடங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1990ம் ஆண்டு டிசம்பர் திங்கள், யூனெஸ்கோவினால், உலகப் பண்பாடு மற்றும் இயற்கை மரபுச் செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதே நேரத்தில் பண்பாடு மற்றும் இயற்கை, மரபுச் செல்வங்களின் பட்டியலிலும் சேர்க்கப்பட்ட சீனாவின் முதல் இடமாக ஹூவாங்ஷான் புகழ்பெறுகிறது. 2004ம் ஆண்டு பிப்ரவரி திங்கள், உலகில் நிலவியல் பூங்காவாக இது தேர்ந்தெடுக்கப்பட்டது.