சர்வதேச சீன வானொலி தமிழ்ப் பிரிவின் ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து முனுகப்பட்டு. பி. கண்ணன் சேகர் பேசுகிறேன். மே 25ம் நாள் மாலை 5:30 மணிக்கு சர்வதேச சீன வானொலியின் உயர் அதிகாரிகள் அளித்த விருந்தில், இலவச பயணமாக சீனா வந்துள்ள 10 நாட்டு நேயர்களும் மகிழ் வோடு கலந்து கொண்டோம். இதில் ஒவ்வொரு நேயர்களின் கருத்தும் பேசப்பட்டு அந்தந்த மொழிப் பிரிவினர் சீன மொழியில் ஆக்கம் செய்து கூறினார்கள். நானும் தமிழ் மூலம் எனது கருத்துக்களை முன் வைத்தேன். "ஒரே உலகம் ஒரே கணவு" என்ற தத்துவம் தற்போது இங்கே நடைமுறைப் படுத்தப்படுகின்றது. உலக அமைதிக்கு ஆற்றும் பணிகளில் இந்த இலவசப் பயணம் ஏற்பாடுகளையும் இனைத்துக் கொள்ளலாம். காரணம் பன்னாட்டு நேயர்கள் சங்கமித்து தங்கள் கருத்தை கூறுவது மூலம், இந்த ஒருங்கிணைப்பை உருவாக்கிய சீன வானொலியையும் சீன அரசையையும் பாராட்டி மகிழ்கிறேன். நேயர்களின் கருத்துக்கள் நிறைவு பெற்றதும். சீன வானொலியின் ஏற்பாட்டில் நல்ல விருந்து அளித்து மகிழ்வித்தனர். இந்த விருந்து உபசரிப்பில் என் மேஜை வட்டத்தில் தமிழ்ப்பிரிவுத் தலைவர் தி. கலையரசி அவர்களும், சீன வானொலி துணை இயக்குனர் குவான் யூன் பன் அவர்களும், முதலாவது ஆசியத் துறைத் தலைவர் ஹெச்சிங் சோ அவர்களும் கலந்துரையாடி விருந்து அருந்தியதை என்னால் மறக்க இயலவில்லை.
மே 26ம் நாள் எனது சீனப் பயணமாக உலக புகழ் பெற்ற தியெனான்மென் சதுக்கமும், பேரரசர் ச்சூட்டி அரண்மனையையும் பார்க்கச் சென்றேன். என்னுடன் சகோதரர் மோகன் வந்திருந்தார். சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் அமைந்துள்ள அரண்மனை பெரும் பரப்பளவில் காண்போரை ஈர்க்கும் அளவுக்கு இருக்கின்றது. தியெனான்மென் சதுக்கம் அரசு விழா மற்றும் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் பாதுகாப்பான இடம் என்றே கருதுகின்றேன். தினசரி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிந்தேன். நான் செல்லும் போது கூட கொடியேற்றும் நிகழ்ச்சியை நேரில் பார்க்க முடிந்தது.
தியெனான்மென் சதுக்கத்தின் அருகே அமைந்துள்ள பேரரசர் ச்சூட்டி அரண்மணையை சென்று பார்த்த போது, வியப்பின் உச்சிக்கே சென்று விட்டேன். தமிழகத்தில் அடிக்கடி பயின்படுத்தும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பது என்ற நடவடிக்கைக்கு அர்த்தம் எனக்கு இப்போதுதான் விளங்கியது. எங்கு பார்த்தாலும் சிவப்பு வண்ணத்தில் அரண்மணையின் அலங்கரிப்பு, அரசர் மற்றும் அதிகாரிகள் வாழ்ந்த வீடுகள் என பல ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவில் அரண்மணை விரிந்து பரந்து இருக்கின்றது. தினசரி லட்சங்கணக்கில் மக்கள் குவிந்து கொண்டே இருப்பது வாடிக்கையாக இருப்பதை நேரில் கண்டு ரசித்தேன்.
அக்காலத்தில் அரசர் பயன்படுத்திய பொருட்கள் சிம்மாசனங்கள், மண்டபம் என காலை நுட்பம் கொட்டிக் கிடக்கின்றது என்புத உண்மை! அரசர் வரும் பாதையில் பவவித கலைக் கோலங்கள் பாறை கற்களால் அமைக்கப்பட்ட படிக்கட்டுகளில் செதுக்கப்பட்டு, இன்னும் பார்த்துக் கொண்டே இருக்க தூண்டுகின்றது. அரண்மணை அருகே ஆங்காங்கே மிகப் பெரிய குவளைகள் வைக்கப்பட்டிருந்தது. ஏதேனும் தீவிபத்து ஏற்படும் நேரத்தில், அந்த குவளைகளில் வைக்கப்பட்ட நீர் மூலம் தீபரவுவதை தடுக்கவே இந்த ஏற்பாடு என்பதை சகோதரர் மோகன் விளக்கம் தந்தார். அரண்மணை வாயிலை கடந்து போகும் போது பல வித கட்டிங்கள் பார்த்தாலும், மீண்டும் மீண்டும் வாயில்கள் வந்துகொண்டேயிருக்கின்றது. திரைப்படத்தில் பார்ப்பது போல வாயில்கள் பல வருவதும் அதன் பிறகு ஒவ்வொரு காட்சியாக காண்பதும் கண்களுக்கு விருந்து மட்டுமல்ல. சீனாவின் பாரம்பரிய கட்டிட கலைக்கு சாட்டியாகவும் இருக்கின்றது.
இதனை அடுத்து அரண்மணையின் தோட்டம் பார்த்தேன். அங்கே சின்ன சின்ன மலைகள் மீது கட்டப்பட்ட கட்டிங்கள், பல ஆயிரம் வயதை கொண்டு நிற்கும் மரங்கள் கற்பாறை சிற்பங்கள் என அரண்மணைக்கு அழகு சேர்க்க மேலும் அழகை அள்ளி வீசுகின்றன. இன்றைய பயணம் இனிதே அமைந்தது மட்டுமல்ல! அந்த இடத்தை விட்டு நானஅ மட்டும்தான் வெளியேறினேன். ஆனால், என் மனது மட்டும் வெளியேறவே இல்லை எந்பதுதான் உண்மை!
|