• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-27 15:48:17    
குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொண்டர்களின் காவலர் பணி 1

cri
2010ம் ஆண்டு சீனாவின் குவாங் துங் மாநிலத்திலுள்ள குவாங் சோ நகரில் 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெறும். 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் மற்றும் உடல் சவாலுற்றோர் விளையாட்டுப் போட்டிகளை அடுத்து, சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டியை சீனா மீண்டும் நடத்தவுள்ளது. பெய்சிங் ஒலிம்பிக் மற்றும் உடல் சவாலுற்றோர் விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு, தொண்டர்கள் மிகவும் மதிப்புள்ள பங்காற்றியுள்ளனர். குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு தொண்டர்களின் தலைசிறந்த சேவையையும் தேவைப்படுகின்றது.
16வது குவாங் சோ ஆசிய மற்றும் உடல் சவாலுற்றோர் விளையாட்டுப் போட்டிகளின் தொண்டர்களில், போட்டி ஆயத்த தொண்டர்கள், விளையாட்டு ஒழுங்கை கவனிக்கும் தன்னார்வத் தொண்டர்கள், நகர தொண்டர்கள் இடம் பெறுகின்றனர். போட்டி ஆயத்த தொண்டர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும்,

விளையாட்டு ஒழுங்கை கவனிக்கும் தன்னார்வத் தொண்டர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தையும், நகர தொண்டர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை தாண்டும் என்று அறியப்படுகின்றது.
குவாங் சோ ஆசிய மற்றும் உடல் சவாலுற்றோர் விளையாட்டுப் போட்டியின் விளையாட்டு ஒழுங்கை கவனிக்கும் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் நகர தொண்டர்களின் காவலர் பணி ஏப்ரல் 21ம் நாள் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. ஹாங்காங், மகௌ, தைவான் சகநாட்டவர்கள், கடல் கடந்த சீன மக்கள், வெளிநாடுகளிலுள்ள சீன மாணவர்கள், சர்வதேச நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக வட்டாரங்களின் விண்ணப்பத்தை குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் அரசு இணைய தளம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள துவங்கியது.

கடந்த ஒரு திங்களுக்குள், இணைய தளம் மற்றும் நகர வாக்குப்பதிவு நிலையங்கள் மூலம், ஒரு இலட்சத்துக்கு அதிகமானோர் தொண்டர் சேவைபுரிய தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர்.
குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழுவின் தொண்டர் ஆணையத்தின் தலைவர் Wang Huanqing, ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொண்டர்களின் காவலர் பணியை விளக்கிய போது இவ்வாறு தெரிவித்தார்.
தொண்டர்களின் சேவையைப் பார்க்கும்போது, குவாங் சோ தொண்டர்கள் குழு யிற்சி பெறும் முக்கிய வாய்ப்புகளில் ஒன்று இந்தப் போட்டியாகும். அத்துடன், குவாங் சோ தொண்டர் சேவை பணி புதிய கட்டத்தில் நுழையும் முக்கிய வாய்ப்புகளில் ஒன்றும் இதுவாகும் என்று அவர் கூறினார்.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், சீன விளையாட்டு பிரதிநிதிக் குழுவில் முதல் தங்கப் பதக்கத்தை பெற்ற சீன பளுதூக்குதல் வீராங்கனை Chen Dianxia, குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் தொண்டராக பதிவு செய்துள்ளார். சீன பொறியியல் கழகத்தின் மூத்த அறிஞரும்,

தென் சீன பொறியியல் பல்கலைக்கழக கட்டிட கழகத்தின் தலைவருமான He Jingtang, 18 உலக சாம்பியன் பட்டங்களை பெற்ற சீன புகழ் பெற்ற மேசை பந்து வீராங்கனை Deng Yaping ஆகியோர் குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொண்டர்களாக மாறியுள்ளனர். ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமையை பெற விண்ணப்பித்த பணியில் கலந்துகொண்ட குவாங் சோ தொலைக்காட்சி நிலையத்தின் ஆங்கில பிரிவின் தலைமைப் பதிப்பாசிரியரும் குவாங் சோ நகர புகழ் பெற்ற தூதருமான Yin Jie அம்மையார் இந்த போட்டியின் 4வது தொண்டராக பதிவு செய்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியின்போது, தொண்டர்கள் அனைவரும் குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் புகழ் பெற்ற தூதர்களாக திகழ்வர். எந்த துறைகளில் தொண்டராக மாற விரும்புவதாக Yin Jie தெரிவித்தார்.