• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-27 17:29:48    
சிறப்பு நேயரின் உணர்வு

cri
வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரிய சர்வதேச சீன வானொலி தலைமை இயக்குனர் அவர்களே, துணை இயக்குனர் அவர்களே சீன வானொலி தமிழ்ப் பிரிவை செவ்வனே நடத்தி முன்னேற்றி வருகின்ற தலைவர் திருமிகு தி. கலையரசி அவர்களே, மற்றும் பல மொழி பிரிவுத் தலைவர்களே மேலை நாட்டின் நேயர்களே அனைவருக்கும் நல் வணக்கங்கள்.
அமைதியும் ஆன்மீகமும் தழைத்தோங்கும் சீனாவின் புனித பூமியில் எனது பாதங்கள் பதிந்தபோது எனக்குள் பாயும் இரத்த ஓட்டம் இந்திய சீன நட்புறவை சொல்லும் நாடித்துடிப்பாக இருப்பதை உணருகிறேன். பன்னாட்டு நேயர்கள் பாசபறவைகளாய் இங்கே குழுமியிருக்கும் இந்த அவை இப்போது ஒற்றுமையின் பெருமையை பறைசாற்றுகின்றது. உலக ஒன்றிணைப்புக்கு எடுத்துக்காட்டாய் சீன வானொலி ஏற்படுத்திய இந்த பயண வாய்ப்பு எனது வாழ்வில் மணம் மாறாத மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இதற்காக நான் பெருமை அடைகின்றேன்.

உலக நாடுகளின் நட்புறவை ஆழமாக்கவும் இதர நாடுகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தவும் சீனா எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்ற திருக்குறளின் கருத்துக்கேற்ப உலகின் பல நாடுகளுக்கு தேவையானபோது நேசக்கரம் நீட்ட சீனா தயங்கியதில்லை. அண்டை நாடுகளோடு பதட்டமில்லா உறவை சீனா எப்போதும் கடைபிடித்து வருவது பாராட்டதக்கது.
பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளான போதும் கடும் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டபோதும் தொற்று நோய்கள் அச்சுறுத்தலின் போதும் சீனா தன்னையும் நிலைநிறுத்தி இதர நாடுகளுக்கு ஆலோசனை வழங்கி பேருதவி செய்துள்ளது. இதன் மூலம் சீனாவின் தனித்தன்மையையும் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியையும் உலகம் வியந்து பாராட்டி நன்றி தெரிவித்து வருகின்றது. இவற்றால் சீனாவின் திறமையான நிர்வாகத்தை நாம் பார்க்கமுடிகிறது. பாரம்பரிய பண்பாட்டை கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க நாடுகளாய் இந்தியாவும் சீனாவும் விளங்குகின்றன. இரு நாடுகளும் பல்லாயிரம் ஆண்டுகால நட்பு நாடுகள் என்பதை வரலாற்று பக்கங்களில் வாசிக்க முடிகின்றது.
சீனாவில் பட்டுப்பாதை, பஞ்சசீலகொள்கை, சீனத் தூதுவர் யுவாங்சுவாங் இந்திய வருகை போன்ற வரலாற்று நிகழ்வுகள் இரு நாட்டின் நட்புறவின் வயதை குறிப்பிடுவதாக இருக்கிறது. இது இன்றும் தொடர்ந்து பல நாடுகளுக்கும் முன்னுதாரணமாய் திகழ வேண்டும் என்பதே என் விருப்பம். இத்தகைய கூட்டாளி உறவு இந்திய வரலாற்றில் எழுதப்பட்ட பொன் எழுத்துக்களாய் பளிச்சிடுகின்றன.
சீனாவின் தத்துவமேதை கன்பூசியஸ் கருத்துக்கள் இன்றைய உலகிற்கு மிகவும் தேவைப்படுகின்றது. உழைக்கும் மக்களின் உரிமைக்கு போராடிய இவரின் தத்துவங்கள், உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள். உலகம் நமதே என்று சிந்து பாடுங்கள் என்ற உயரிய சிந்தனையை ஒட்டியதாக இருப்பதை அறிகிறேன்.
இந்த சிந்தனையாளரின் உருவச்சிலை சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் நான் வசிக்கும் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த பல்கலைக்கழகத்தில் 500க்கும் மேற்பட்ட சீன மாணவ மாணவியர் கல்வி கற்பது குறிப்பிடதக்கதாகும்.
சீன இந்திய நட்புறவு மேலும் வளர்ச்சி கண்டு உலக அமைதிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் வழிக்காட்டி ஒன்றுபட்ட உலகத்தை உருவாக்க இரு நாடுகளும் முன்னுதாரணமாய் பாடுபட்டு வருகின்றன. பெருமைக்குரிய இந்த அவையால் எனக்கு வாய்ப்பு தந்த சர்வதேச சீன வானொலிக்கும் சீன அரசுக்கும் நன்றியும் வணக்கங்களும்.